வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிப்பு.. எந்தெந்த மாவட்டங்களின் கீழ் எந்தெந்த தாலுக்காக்கள்.. பட்டியல் இதோ

Google Oneindia Tamil News

சென்னை: வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிக்கப்பட்டால் எந்தெந்த மாவட்டங்களின் கீழ் எந்தெந்த தாலுக்காக்கள் வரும் என்பது குறித்த ஒரு உத்தேச பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

150 கி.மீ. பரப்பளவு கொண்ட பெரிய மாவட்டமான வேலூரில் 13 சட்டசபை தொகுதிகளும் 2 மக்களவை தொகுதிகளும் உள்ளன. இங்கு நிர்வாக வசதி என்பது பெரும் கடினமாக இருந்து வந்தது.

Here is the list of Taluk comes under new districts of Vellore

கடைகோடி கிராமத்தில் இருப்போரும், தங்கள் தேவைகளுக்காக பல கி.மீ. தூரம் பயணம் செய்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுந்துள்ளது.

இந்த நிலையில் இன்று சுதந்திர தின விழாவில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படுகிறது. திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடங்களாக கொண்டு வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிக்கப்படுகிறது என அறிவித்தார்.

இந்த நிலையில் எந்தெந்த மாவட்டங்கள், எந்தெந்த தாலுக்காக்களுக்கு கீழ் வரும் என்பது குறித்து ஒரு உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தின் கீழ் வரும் தாலுக்காக்கள்:

1) அரக்கோணம்

2) காவேரிபாக்கம்

3) வாலாஜா

4) ராணிப்பேட்டை

5)ஆற்காடு

வேலூர் மாவட்டத்துக்கான தாலுக்காக்கள்:

1) வேலூர்

2) அணைக்கட்டு

3) குடியாத்தம்

4) கே.வி.குப்பம்

5) காட்பாடி

திருப்பத்தூர் மாவட்டத்துக்கான தாலுக்காக்கள்:

1)பேர்னாம்பட்டு

2)ஆம்பூர்

3)வாணியம்பாடி

4)திருப்பத்தூர்

5)நாற்றம்பள்ளி

English summary
Here is the tentative list of Taluk comes under new districts of Ranipet and Thirupattur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X