வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் சூடுபிடிக்கும் வேலூர் தொகுதியில் மீண்டும் வருமான வரி சோதனை

Google Oneindia Tamil News

Recommended Video

    வேலூர் தொகுதியில் மீண்டும் வருமான வரி சோதனை

    வேலூர்: வேலூர் மக்களவை தொகுதியில் மீண்டும் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.

    தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் வேலூரில் துரைமுருகன் வீட்டிலும் அவரது மகனும் திமுக வேட்பாளருமான கதிர்ஆனந்தின் கல்லூரி மற்றும் பள்ளியில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.

    இங்கிருந்து பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் திமுக பிரமுகர் ஒருவரது சிமெண்ட் குடோனிலும் சோதனை நடைபெற்றது. இங்கு கட்டுக் கட்டாக பணம், அதன் உறையின் மீது தெருவின் பெயர், வார்டு எண் ஆகியன எழுதப்பட்டிருந்தது கைப்பற்றப்பட்டது.

    2 குடிகாரர்கள்.. நடு ரோட்டில் திடீரென படுத்து.. தட்டி எழுப்பி விசாரிச்சா.. அடக் கொடுமையே2 குடிகாரர்கள்.. நடு ரோட்டில் திடீரென படுத்து.. தட்டி எழுப்பி விசாரிச்சா.. அடக் கொடுமையே

    37 இடங்களில் வெற்றி

    37 இடங்களில் வெற்றி

    இதையடுத்து அந்தத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்தானது. பின்னர் மீதமுள்ள 38 தொகுதிகளுக்கும் கடந்த 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக ஒரு இடத்திலும் திமுக 37 இடங்களிலும் வெற்றி பெற்றது.

    தேர்தல் ஆணையம்

    தேர்தல் ஆணையம்

    இந்த நிலையில் வேலூருக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    திமுக சார்பில்

    திமுக சார்பில்

    இந்த அறிவிப்பு வந்த நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளரும் புதிய நீதி கட்சியின் தலைவருமான ஏசி சண்முகமும் திமுக சார்பில் கதிர் ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் போட்டியிடுகின்றனர்.

    வருமான வரித் துறை

    வருமான வரித் துறை

    தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட புதுவசூரில் திமுக பிரமுகரின் தம்பி ஏழுமலை வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது. அப்போது ஒரு கட்டப்பையில் ரூபாயை கட்டி வெளியில் வீசியுள்ளனர். அதனை வருமானவரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பையில் பார்த்த போது ரூ.28 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்த போது அது தன்னுடைய பணம் என்பதை ஏழுமலை ஒப்புக் கொண்டார். அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டதாக என்பதை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே திமுக பிரமுகர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டால்தான் அங்கு தேர்தல் ரத்தானது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Income Tax officials conducting raid in Vellore constituency which faces election on August 5.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X