வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜக்கம்மா சொல்றா.. உதய சூரியனுக்கு ஓட்டு போடுங்க.. அப்பத்தான் குடும்பம் நல்லா இருக்கும்.. அடேங்கப்பா!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜக்கம்மா சொல்றா.. உதய சூரியனுக்கு ஓட்டு போடுங்க! நூதன பிரச்சாரம்-வீடியோ

    வேலூர்: "ஜக்கம்மா சொல்றா... ஜக்கம்மா சொல்றா.. உதய சூரியனுக்கு ஓட்டு போடுங்க..அப்பத்தான் உங்க குடும்பம் நல்லா இருக்கும்" என்று வேலூர் தொகுதியில் பட்டையை கிளப்பி கொண்டுள்ளனர் திமுகவினர்.

    வேலூரில் 5-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக ஆளும் தரப்பு, எதிர்தரப்பு என கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தொகுதியில் குவிந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் புதுப்புது வியூகங்களை அமைத்து முகாமிட்டு உள்ளனர். இதில் புது புது கெட்டப்பில் மக்களை சந்தித்து வாக்கு கேட்கவும் களத்தில் குதித்துள்ளனர்.

    Jakkammal campaign in Vellore Constitution Election

    அதில் ஒன்றுதான் குடுகுடுப்பைக்காரர் கெட்டப். ஆம்பூர் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் இந்த குடுகுடுப்பைக்காரர் கெட்டப்பில் திமுகவினர் மக்களிடம் குறி சொல்லி வருகிறார்கள்.

    "நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது.. உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க.. ஜக்கம்மா சொல்றா... ஜக்கம்மா சொல்றா.. உதய சூரியனுக்கு ஓட்டு போடுங்க.. விலைவாசி கம்மியாகணுமா உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க.. படிச்ச புள்ளைக்கு வேலை வாய்ப்பு கிடைக்கணுமா, உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க.. குடும்பம் நல்லா இருக்கணுமா, உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க"

    எப்போதும் குபுக்கென அழும் குமாரசாமி.. அன்னிக்கு மட்டும் குபீர் குஷிக்கு மாறியது ஏன்??? எப்போதும் குபுக்கென அழும் குமாரசாமி.. அன்னிக்கு மட்டும் குபீர் குஷிக்கு மாறியது ஏன்???

    "மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம் நடக்காம இருக்கணுமா, உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க.. பேருந்து கட்டணம் குறையணும்னா உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க.. அப்பத்தான் உங்க குடும்பம் நல்லா இருக்கும்" என்று குடுகுடுப்பையை அடித்தபடி ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.

    உதயசூரியனுக்கு ஓட்டு போடுகிறார்களோ இல்லையோ, இப்படி வித்தியாசமாக டிரஸ் போட்டு கொண்டு ஓட்டு கேட்பதை பொதுமக்கள் ரசித்து கேட்கிறார்கள். அது மட்டுமில்ல.. இதில ஒரு டெக்னிக்கும் இருக்கு. இப்படி ஒரு கெட்-அப்பில் வாக்கு கேட்டால், தேர்தல் செலவு கணக்கில் இது சேராது பாருங்க!

    English summary
    DMK members campaign in Vellore Constitution election with Jakkammal Get up
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X