வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர்.. ஆரம்பித்தது பள்ளம் தோண்டும் வேலை

Google Oneindia Tamil News

Recommended Video

    Water Supply By Train: ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்..வீடியோ

    வேலூர்: ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரும் பணிகள் தொடங்கியுள்ளன.

    இதையொட்டி, ஜோலார்பேட்டை நீர்த்தேக்கத் தொட்டிக்கு குழாய் மூலம் தண்ணீர் எடுத்துவர பள்ளம் தோண்டும் பணி தொடங்கியுள்ளது. மேட்டுச்சக்கரக்குப்பம் நீர்த்தேக்க தொட்டியிலிருந்து ஜோலார்பேட்டைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

    Jolarpettai to Chennai water service started

    இதன்பிறகு ஜோலார்பேட்டையிலிருந்து, சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. சென்னையில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால், ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை தமிழக அரசு கையிலெடுத்துள்ளது.

    இந்த நிலையில்தான், அதற்கான பணிகள் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் வீதம் தண்ணீர் எடுத்துவரும் திட்டம் இதுவாகும். இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.65 கோடி இதுவரை ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் சென்னை நகர தண்ணீர் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    In a try to address the severe water shortage in Chennai, the Tamil Nadu government has started to dig land in Jolarpettai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X