வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலூர் தேர்தலின் போது ஏன் இந்த ஞானம் வரவில்லை.. திமுகவிற்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி.. பரபரப்பு!

வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னர் ஏன் திமுகவிற்கு இந்த ஞானம் வரவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

Google Oneindia Tamil News

வேலூர்: வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னர் ஏன் திமுகவிற்கு இந்த ஞானம் வரவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக காங்கிரஸ் இடையிலான பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டு கட்சிகளின் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்று கூறுகிறார்கள். இரண்டு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு சண்டை போட்டு வருகிறார்கள்.

உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை. திமுக கூட்டணி ஒப்பந்தத்தை மீறிவிட்டது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி குறிப்பிட்டுள்ளார். இதுதான் சண்டைக்கு தொடக்கமாக அமைந்தது.

திமுக கூட்டணியிலிருந்து காங். விலகினாலும் கவலையில்லை.. உங்களுத்தான் நஷ்டம்.. துரைமுருகன் பரபரப்பு!திமுக கூட்டணியிலிருந்து காங். விலகினாலும் கவலையில்லை.. உங்களுத்தான் நஷ்டம்.. துரைமுருகன் பரபரப்பு!

இன்று என்ன

இன்று என்ன

இந்த பிரச்சனை தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். அதில், காங்கிரஸ் எங்களைவிட்டு விலகிப்போனால் போயிட்டு போறாங்க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை. குறிப்பா நான் துளி கூட கூட கவலைப்பட மாட்டேன். அவர்களுக்குத்தான் சிக்கலாக முடியும். அது காங்கிரசுக்கு தான் நஷ்டம்,என்றார் .

என்ன கேள்வி

என்ன கேள்வி

இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தற்போது கேள்வி எழுப்பி உள்ளார். அதில், வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னர் ஏன் இந்த ஞானம் வரவில்லை?. அப்போது மட்டும் காங்கிரஸ் கட்சியின் உதவி திமுக கவிற்கு தேவைப்பட்டதோ. இப்போது மட்டும் நாங்கள் தேவை இல்லை என்று திமுக எப்படி சொல்லலாம் என்று கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

வேலூர் தேர்தல்

வேலூர் தேர்தல்

வேலூர் லோக்சபா தேர்தலில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அங்கு திமுக கூட்டணி மிகப்பெரிய இழுபறிக்கு பின்தான் வென்றது. கதிர் ஆனந்த் தோல்விக்கு அருகே சென்று 8141 வாக்குகள் வித்தியாசத்தில்தான் கதிர் ஆனந்த் வென்றார்.

கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

இதைத்தான் கார்த்தி சிதம்பரம் தற்போது சுட்டிக் காட்டியுள்ளார் என்று கூறுகிறார்கள். இதனால் திமுக காங்கிரஸ் கூட்டணி மொத்தமாக உடையும் நிலையில் உள்ளது. இது தொடர்பாக இன்னும் திமுக தலைவர் ஸ்டாலின் எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.

English summary
MP Karthi Chidambaram replies to Duraimurgan's comment on DMK Congress alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X