வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேலூரில் தேர்தல் ரத்து முடிவை திரும்ப பெற வேண்டும்- தேர்தல் ஆணையத்துக்கு கதிர் ஆனந்த் கடிதம்

Google Oneindia Tamil News

Recommended Video

    வேலூரில் தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையத்துக்கு கதிர் ஆனந்த் கடிதம்- வீடியோ

    வேலூர்: வேலூரில் தேர்தல் ரத்து முடிவை திரும்ப பெற வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு கதிர் ஆனந்த் கடிதம் எழுதியுள்ளார்.

    வேலூர் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் கடந்த மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது. மேலும் வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

    திமுக பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலிருந்து ரூ 11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் இங்கு தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

    தேர்தல்

    தேர்தல்

    இதையடுத்து வேலூரில் தேர்தலை நிறுத்த தேர்தல் ஆணையம் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியது. அவர் ஒப்புதல் அளித்ததன் பேரில் வேலூரில் தேர்தலை நிறுத்துவதாக அறிவித்தது தேர்தல் ஆணையம்.

    சோதனையில் ஒன்றையும் கைப்பற்றவில்லை.. அச்சுறுத்துவதற்காகவே சோதனை- கனிமொழி விளக்கம் சோதனையில் ஒன்றையும் கைப்பற்றவில்லை.. அச்சுறுத்துவதற்காகவே சோதனை- கனிமொழி விளக்கம்

    பறிமுதல்

    பறிமுதல்

    இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் சீனிவாசன் என்பவரது வீட்டில் இருந்து வருமான வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த பணத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    வருமான வரித் துறை

    வருமான வரித் துறை

    எனது வீட்டில் சோதனையின் போது எடுக்கப்பட்ட பணத்துக்கு உரிய கணக்குகள் காண்பிக்கப்பட்டன. அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகத்தை வெற்றி பெற வைப்பதற்காகவே வருமான வரி துறையினர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    கடிதம்

    கடிதம்

    வருமான வரித் துறையினரின் தவறான அறிக்கையின் அடிப்படையில் தேர்தலை ரத்து செய்திருப்பது சட்டத்துக்கு விரோதமானது. திட்டமிட்டபடி வேலூரில் தேர்தலை நடத்த வேண்டும் என அந்த கடிதத்தில் கதிர் ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Kathir Anand writes letter to EC saying that getback the Vellore lok sabha election cancellation order.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X