வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரியா தான் எனக்கு வேணும்.. அவதான் என் வாழ்க்கை.. கெத்து காட்டிய மாப்பிள்ளை ரவி.. குவியும் பாராட்டு!

மனநல பாதிப்பு அடைந்த பெண்ணை இளைஞர் திருமணம் செய்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரியா தான் எனக்கு வேணும்! மாப்பிள்ளை ரவிக்கு குவியும் பாராட்டு!

    வேலூர்: "எனக்கு ரோஜா பிரியாதான் வேணும்.. என்ன குறை இருந்தாலும் சரி.. அவள்தான் என் வாழ்க்கை" என்று கல்யாண மண்டபம் முதல் போலீஸ் ஸ்டேஷன்வரை மாப்பிள்ளை ரவி கெத்து காட்டிவிட்டார்.

    வேலூர் அணைக்கட்டு தாலுகா திப்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. கூரியர் ஆபீஸில் லோடுமேன் வேலை பார்க்கிறார். இவருக்கும், பலவன்சாத்து குப்பம் பகுதியை சேர்ந்த ரோஜா பிரியா என்ற பெண்ணுக்கும் இரு வீட்டு பெரியவர்களும் கல்யாணம் பேசி முடித்திருந்தனர். ரோஜா பிரியாவுக்கு 20 வயதாகிறது.

    அதன்படி நேற்று காலை சேண்பாக்கத்தில் உள்ள ஒரு கோயிலில் கல்யாணம் நடக்க இருந்தது. இதற்கான பத்திரிகைகள் இரு வீட்டு தரப்பிலும் கொடுக்கப்பட்டிருந்ததால், மண்டபத்தில் கூட்டம் திரண்டு காணப்பட்டது.

    விநாயகர் சிலை கரைப்பின் போது விபரீதம்.. ஆற்றில் படகு கவிழ்ந்து 11 பேர் பலிவிநாயகர் சிலை கரைப்பின் போது விபரீதம்.. ஆற்றில் படகு கவிழ்ந்து 11 பேர் பலி

    அலங்காரம்

    அலங்காரம்

    மணமக்கள் ஆடை, அலங்காரங்களுடன் மணமேடையில் உட்கார்ந்திருந்தனர். மந்திரங்கள் முழங்கப்பட்டன. தாலி கட்டும் நேரமும் நெருங்கியது. திடீரென "எங்களுக்கு பெண்ணை பிடிக்கவில்லை, தாலி கட்டக்கூடாது" என்று ரவியின் பெற்றோர் ஒரு குண்டை தூக்கி போட்டார்கள்.

    முடியாது

    முடியாது

    இதைக் கேட்டு பெண் வீட்டார் மட்டுமில்லை.. ரவியும் ஆடிப்போய்விட்டார். ஆனால் தொடர்ந்து மாப்பிள்ளை தரப்பிலோ "பெண் வேண்டவே வேண்டாம், அவளுக்கு திக்கு வாய், மனநலம் பாதிக்கப்பட்டவள்.. எங்களால் ஏத்துக்க முடியாது" என்று கத்தி தகராறு செய்தனர். ரவியோ, "இந்த பெண்ணைதான் கல்யாணம் செய்து கொள்வேன்" என்று பெற்றவர்களையும், சொந்தக்காரர்களையும் சமாதானம் செய்தார்.

    வடக்கு ஸ்டேஷன்

    வடக்கு ஸ்டேஷன்

    எனினும், இந்த கல்யாணத்தையே நடக்க விட மாட்டோம் என்று ரவியின் பெற்றோர் உறுதியாக சொல்லிவிட்டனர். இதையடுத்து ரவியை மண்டபத்தில் காணவில்லை. எங்கே போனார் என்று ஆளுக்கு ஒரு பக்கம் தேட ஆரம்பித்துவிட்டதால் பதட்டம் அதிகமானது.

    அவள்தான் என் மனைவி

    அவள்தான் என் மனைவி

    ஆனால் ரவி நேராக வேலூர் வடக்கு ஸ்டேஷனில் போய் தன்னுடைய பெற்றோர்கள் மீது புகார் கொடுத்து கொண்டிருந்தார். "எனக்கு பெண்ணை பிடிச்சிருக்கு. அவளது ஊனம், மனநல பாதிப்பு தெரிந்துதான் கல்யாணம் செய்ய சம்மதித்தேன். என்ன ஆனாலும்சரி, அவள்தான் என் மனைவி.. அவளுடன்தான் வாழ்வேன். என் கல்யாணத்தை நீங்க வந்து நடத்தி வைங்க. என்னால ஒரு பொண்ணோட வாழ்க்கை பாதிக்கப்பட கூடாது" என்று ஸ்டேஷனில் சொன்னார்.

    சமாதானம்

    சமாதானம்

    இதையடுத்து, இரு தரப்பினரையும் அழைத்துப் பேசிய போலீஸார், "ரவியின் திருமணத்தை தடுக்க யாருக்கும் உரிமையில்லை. விருப்பமில்லாதவர்கள் திருமணத்தில் கலந்துகொள்ளத் தேவையில்லை. பிரச்சனை செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ரவியின் குடும்பத்தாரை எச்சரித்தனர். மேலும், ரோஜா பிரியாவுடன் பதிவு திருமணம் செய்துகொள்ளுமாறு ரவியிடம் போலீஸார் அறிவுறுத்தினர்.

    பாராட்டுக்கள்

    பாராட்டுக்கள்

    இதையடுத்து, ரோஜாபிரியாவை பதிவு திருமணம் செய்வதாக மாப்பிள்ளை ரவி எழுதி கொடுத்தார். பின்னர், ரோஜாபிரியா வீட்டினருடனேயே ரவி சென்றுவிட்டார். ரவியின் இந்த துணிச்சலான முடிவுக்கும், ஈர மனசுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

    English summary
    Parents stopped the marriage near Vellore because of they dont like the bride and Police advised them
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X