வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடி கை காட்டினா போதும்.. டோட்டல் திமுகவும் குளோஸ்.. ராஜேந்திர பாலாஜி பரபர பேச்சு

திமுகவையே காலி பண்ணிடுவோம் என்று ராஜேந்திர பாலாஜி பேசி உள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Rajendra Balaji Press Meet | முதல்வருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுங்க: ராஜேந்திர பாலாஜி பகீர்

    ஆம்பூர்: "தொண்டர்கள்கிட்ட இந்த பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க.. நீங்கெல்லாம் இப்பதான் ரவுடி.. நாங்க யார் தெரியுமா? பிறவிலேயே ரவுடி" என்று பேசி இருப்பவர் யார் தெரியுமா? சாட்சாத் நம்ம அமைச்சர் ராஜேந்திர பாலாஜியேதான்!

    வேலூர் மக்களவை தொகுதியில் 5-ம் தேதி தேர்தல் நடக்க போகிறது. இதில் திமுக, அதிமுக கடும் போட்டியில் உள்ளது. இதற்காக எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ஒரு பக்கமும், மு.க.ஸ்டாலின், உதயநிதி உட்பட நிர்வாகிகள் மற்றொரு புறமும் வேலூரில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

    Minister Rajendra Balajis controversy speech in Ambur

    இதில் ஆம்பூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார். அப்போது அவர் பேசும்போது, "1972-ல இருந்து தொடர்ந்து 3 முறை புரட்சி தலைவர் எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். அப்பேற்பட்ட இந்த கட்சியை அம்மா வழி நடத்தி வந்தார். அவர், அறிவித்த எல்லா திட்டங்களையும் தொண்டர்களாகிய நாங்கள் செயல்படுத்திட்டு வர்றோம்.

    அன்னைக்கு புரட்சி தலைவர் இருக்கும்போது 17 லட்சம் தொண்டர்கள் இருந்தாங்க. ஆனா இப்போ ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். அதனாலதான் யாராலும் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது. ஸ்டாலின் வாயில் வர்றதெல்லாம் பொய்.. எல்லாமே பொய்யான வாக்குறுதிகள். இவர் ஆட்சிக்கு வந்தால் 150 நாள் வேலை தர போறாராம். ஆனால் நாங்க ஏற்கனவே 4 மாவட்டங்களில் 150 நாள் வேலை தந்துட்டோம்.

    நான் என்ன சொல்றேன்னா, எங்கள் தொண்டர்கள் கிட்டே, இந்த பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் திமுக வெச்சுக்க கூடாது. நீங்கெல்லாம் இப்பதான் ரவுடி, ஆனா நாங்க பிறவியிலேயே ரவுடி.. முதல்வர் கை அசைத்தால் போதும், திமுகவையே அழிச்சிடுவோம்" என்று தாறுமாறாகவும் சர்ச்சையாகவும், டெரர் ஆகவும், பேசினார் அமைச்சர்!

    English summary
    Minister Rajendra Balaji speech controversy about DMK and MK Stalin in Ambur Campaign Meeting
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X