வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலூர் லோக்சபா தேர்தல்.. 15ம் தேதி ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: வேலூர் லோக்சபா தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக திமுக மாவட்டக் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சின் தலைவர் முக ஸ்டாலின் தலைமையில், வரும் 15ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பண விநியோக முறைகேடு புகார் காரணமாக வேலூர் லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வேலூர் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

mk Stalin-led the DMK District Secretaries meeting on 15 th july

நாளை திமுக சார்பில் போட்டியிடும் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த சூழலில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு திமுக தலைமை அழைப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 15ம் தேதி திங்கட்கிழமை மாலை 5 மணிஅளவில் சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

போக்குவரத்துத் துறையா?... எந்த ஜென்மத்திலும் லாபத்தில் இயங்காது... துரைமுருகன் ஆவேசம்போக்குவரத்துத் துறையா?... எந்த ஜென்மத்திலும் லாபத்தில் இயங்காது... துரைமுருகன் ஆவேசம்

வேலூர் லோக்சபா தொகுதி தேர்தல் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக திமுக தலைமை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. எனவே அன்றைய தினம் வேலூரில் தேர்தலில் திமுகவினர் எப்படி பணியாற்ற வேண்டும். திமுக நிர்வாகிகளின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக யுக்திகள் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

English summary
mk Stalin-led the DMK District Secretaries meeting on 15th July, to set agenda for vellore lok sabha election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X