வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீ இருப்பா.. நீ லெப்ட்ல போ.. ரைட்ல திரும்பு.. போப்பா.. போங்க போங்க.. அது யாரு.. அட நம்ம கதிரு!

போக்குவரத்தை வேலூர் எம்பி கதிர் ஆனந்த் சரி செய்த வீடியோ வைரலாகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் கதிர் ஆனந்த்

    வேலூர்: லெப்ட்-ல போ.. ரைட்ல திரும்பு.. என்று நடுரோட்டில் நின்று கொண்டு கையை நீட்டி நீட்டி சொல்லி கொண்டிருந்தவர் வேறு யாருமில்லை.. வேலூர் எம்பி கதிர் ஆனந்த் தான்!

    எத்தனையோ தடைகள், போராட்டங்கள், கல்லடிகள், சர்ச்சைகள், விமர்சனங்களை தாண்டி மகனை எப்படியாவது எம்பி.யாக்கி விட வேண்டும் என்ற துரைமுருகனின் உச்சக்கட்ட துடிப்பும், ஆசையும் இறுதியில் அரும்பாடு பட்டு நிறைவேறியது.

    துரைமுருகன் தன் பிரச்சாரத்தின்போதுகூட, "என் பையன் அமெரிக்காவில் படித்தவர். அங்கே ஒரு லட்சம் டாலர் சம்பளம் தர்றதாக சொன்னாங்க. ஆனா அதையெல்லாம் வேணாம்னு சொல்லிவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார். என் பையன் அரசியலுக்கு புதுசு கிடையாது. கலைஞர்தான் தூக்கிவளர்த்தார். அதனால என்னை பார்த்து, அவருக்கு ஓட்டு போடுங்கள். வேலூர் தொகுதி மக்களுக்கு என் மகனை தத்துக்கொடுக்கிறேன். இனிமேல் அவர், அவர், உங்கள் வீட்டுப் பிள்ளை" என்றார்.

     அமாவாசை

    அமாவாசை

    தத்து கொடுத்துவிட்டதாலோ என்னவோ, தொகுதிக்குள் கதிர்ஆனந்த் அதிரடியாக களம் இறங்கி உள்ளது மக்களுக்கு புது தெம்பை தந்துள்ளது. 2 நாளைக்கு முன்பு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வேலூர் வந்திருந்தார். இதை தவிர, அன்றைய தினம் மாகாளி அமாவாசையும்கூட. அதனால், வேலூரே டிராபிக்கில் தத்தளித்து கொண்டிருந்தது.

     கதிர் ஆனந்த்

    கதிர் ஆனந்த்

    சாயங்காலம் 4 மணியில் இருந்து 8 மணி வரை என 4 மணி நேரத்துக்கு வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் கடுமையான டிராபிக் ஏற்பட்டது. இன்ச்.. இன்ச்சாக வண்டிகள் நகர்ந்து கொண்டிருந்தன. அந்த நேரம் பார்த்துதான், காரில் கதிர் ஆனந்த் வந்து கொண்டிருந்தார். டிராபிக்கை பார்த்ததும், அப்படியே காரில் இருந்து இறங்கிவிட்டார்.

     டிராபிக்

    டிராபிக்

    கீழே இறங்கி பார்த்தால், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வண்டிகள் வரிசை கட்டி நின்றன. பொதுமக்கள் திணறி கொண்டிருப்பதை பார்த்ததும், நடுரோட்டில் நின்று, போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வேலையில் இறங்கிவிட்டார். முன்பக்கம், பின்பக்கம், எதிர்புறம் வரும் வண்டிகளை எல்லாம் தடுத்து நிறுத்தி, ஓரங்கட்டி, வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தி தந்தார். இதனால் நெரிசல் விரைவிலேயே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

     எளிமை

    எளிமை

    ராத்திரி நேரத்தில் டிராபிக்கை சரி செய்து கொண்டிருப்பது நம்ம தொகுதி எம்பிதான் என்றுகூட அங்கிருந்த பெரும்பாலான மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அவ்வளவு எளிமையாக, மக்களோடு மக்களாக இருந்தார் கதிர்ஆனந்த். ஒருசிலர் மட்டும் அடையாளம் கண்டு கொண்டனர். சொகுசு காரில் வந்த எம்பி திடீரென காரிலிருந்து இறங்கி நெரிசலை சரி செய்வதை பார்த்ததும் நெகிழ்ந்து விட்டனர்.

     டிஆர்பி ராஜா

    டிஆர்பி ராஜா

    இப்படித்தான் அடிக்கடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா மன்னார்குடியில் செய்து வருகிறார். இப்போது கதிர்ஆனந்தும் அதே வழியில் இறங்கிவிட்டார். தலைவர்களின் வாரிசுகள் இப்படி மக்களுடன் இணைந்து, மக்களுக்காக செயல்படுவதை பார்க்கும்போது நமக்கு சந்தோஷமாகவே இருக்கிறது.

    English summary
    Vellore DMK MP Kathir Anand cleared Traffic in the Vellore Greent Circle Area and this Video goes viral on socials
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X