வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது என்னங்க நியாயம்.. சீறிய நாம் தமிழர் வேட்பாளர்.. மீண்டும் வேலூரில் களமிறங்கிய தீபலட்சுமி

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore MP Election | வேலூர் தேர்தல்: நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டி- வீடியோ

    சென்னை: "தப்பு செய்தவங்களை தகுதி நீக்கம் செய்யாம, தேர்தலையே ஒட்டுமொத்தமா நிறுத்தறது என்னங்க நியாயம்" என்று கேட்ட தீபலட்சுமிதான், நாம் தமிழர் கட்சியின் வேலூர் தொகுதி வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    நடக்கவிருக்கிற வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலில் அந்தந்த கட்சிகள் ஏற்கனவே போட்டியிட்ட தங்கள் வேட்பாளர்களையே மீண்டும் அறிவித்து வருகிறது.

    அதன்படி நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

    ஆனந்தன், நந்தினியை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்த திட்டம்.. தங்கை நிரஞ்சனாவும் கைது ஆனந்தன், நந்தினியை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்த திட்டம்.. தங்கை நிரஞ்சனாவும் கைது

     விவசாயி சின்னம்

    விவசாயி சின்னம்

    போன முறை தீபலட்சுமியின் பெயர் அறிவிக்கப்பட்ட உடனேயே வேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மிக தீவிரமாக களப்பணியில் இறங்கினார்கள். தேர்தல் சமயத்தின்போது, சின்னம் இந்த கட்சிக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது. எனினும், கடைசி கட்டத்தில்தான் கரும்பு விவசாயி சின்னம் கைக்கு கிடைத்தது. ஒவ்வொரு கட்சி தொண்டர்களும் இந்த சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க பெரிதும் உழைத்தார்கள்.

    சின்னம்

    சின்னம்

    அப்போது கரும்பு விவசாயி சின்னத்தை பிரபலப்படுத்த தீபலட்சுமி தொண்டர்களுக்கு ஒரு ஐடியா தந்திருந்தார். அதன்படி, வீட்டு வாசலில் மற்ற கோலங்களுக்கு பதிலாக கரும்பு விவசாயி சின்னத்தை வரையுங்கள், பார்ப்பவர்களுக்கும் புதுசாக இருக்கும், சின்னமும் சீக்கிரம் மக்களிடம் பிரபலமாகும் என்றார். அப்போதுதான் தீபலட்சுமி என்ற பெண் வேட்பாளர் தொகுதி மக்களால் உற்று நோக்கப்பட்டார்.

     ரத்து ஏன்?

    ரத்து ஏன்?

    இதையடுத்து, வேலூரில் தேர்தல் நின்று போய்விட்டது என்று அறிவிப்பு வரவும் கொதித்து போய்விட்டார். கடந்த ஏப்ரல் 17-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசியபோது, "ஏன் தேர்தலை ரத்து செய்யணும். அவங்கவங்க அப்பா சேர்த்து வைச்ச காசை தொகுதியில் செலவு பண்றாங்க. ஆனால் எங்களுக்கு அப்படி இல்லை. எங்கள் உழைப்பு இதில் அதிகம். இப்படிதிடீர்னு தேர்தலை நிறுத்திட்டால் எப்படி?

     நஷ்ட ஈடு

    நஷ்ட ஈடு

    ஓட்டு போடறதுக்காக வெளிநாடுகளில் இருந்து எங்கள் சொந்தங்கள் வந்திருக்கிறார்கள். தேர்தல் இல்லை என்றால் திரும்பவும் அவர்களால் வர முடியுமா? இந்த தேர்தல் பணிக்காக எத்தனையோ பேர் 15, 20 நாளாக லீவு போட்டுவிட்டு வேலை பார்த்து வருகிறார்கள். இதுக்கெல்லாம் நஷ்டஈடு என்ன? செலவு செய்த பணம் எங்களுக்கு திரும்ப கிடைக்குமா? ஒரு பெண் வேட்பாளர் நானே வீடு வீடாக களமிறங்கி மக்களை சந்தித்து ஓட்டு கேட்கும்போது, இவர்கள் ஏன் பணம் தந்து ஓட்டு கேட்கிறார்கள்?

     வாக்கு சீட்டு

    வாக்கு சீட்டு

    50 வருஷமா ஆட்சியில் இருந்தாங்களே, செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்பதுதானே? சாதனைகள் எதுவுமே இல்லையா? தப்பு செய்தவர்களை தகுதி நீக்கம் செய்யணும், திரும்பவும் அதே வேட்பாளரை நிறுத்தக்கூடாது, வாக்கு எந்திர முறையை மாற்றி வாக்கு சீட்டு முறையை கொண்டு வர வேண்டும்" என்று கொதித்து போய் பேசினார்.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    ஆனால் இன்று, அதே வேட்பாளர்கள்தான் மறுபடியும் அந்தந்த கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் தீபலட்சுமி எந்த அளவுக்கு இறங்கி பிரச்சாரம் செய்வார், திராவிட கட்சிகளை விமர்சித்து தனது கருத்துக்களை எந்த அளவுக்கு எடுத்து வைப்பார் என்பதில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வேலூரில் வெற்றி பெற்று வந்தால், பாலாற்று பிரச்சனையை தீர்ப்பேன்.. ராணிப்பேட்ட தோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆற்றில் கலந்து குடிநீரை மாசுபடுவதை தடுப்பேன், அரசியல் கட்சிகளின் துணையுடன் நடைபெறும் மணல் கொள்ளையை தடுப்பேன் என்று ஏற்கனவே கொக்கரித்தவர் தீபலட்சுமி.

    அதிரடி

    இவர் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை மக்களையும், மண்ணையும் பாதிக்க கூடிய விஷயத்துக்கு நான் எப்பவுமே அடிபணிந்து போகமாட்டேன்" என்பதுதான். இந்த முறை மீண்டும் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ள தீபலட்சுமி எப்படியும் பட்டையை கிளப்பி அதிரடி பிரச்சாரத்தை விரைவில் துவங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Seeman has announced Deepalakshmi as Vellore constitution Naam Tamilar Candidate today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X