வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மன சோர்வில் காணப்படும் நளினி- முருகன்.. தமிழக அரசிடம் புதிய கோரிக்கை வைக்க முடிவு.. வழக்கறிஞர்

Google Oneindia Tamil News

Recommended Video

    நளினி- முருகனுக்கு நிரந்தர பரோல் கேட்டு மனு- வீடியோ

    வேலூர்: இன்னும் தங்களை விடுதலை செய்யப்படாததால் நளினியும் முருகனும் மன சோர்வில் உள்ளதாக அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆளுனரிடம் அளித்த மனு 4 மாதங்களாக நிலுவையில் உள்ளது.

    Nalini and Murugan has very upset, says Advocate Pugazhendi

    இதுகுறித்து நளினி- முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில் தங்கள் மீதான விடுதலையை எதிர்பார்த்து எதிர்பார்த்து காத்திருந்து நளினி-முருகன் மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்கள்.

    ஆளுனர் தமிழக அரசின் தீர்மானத்தை நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கையில் இருந்தார்கள். ஆனால் தற்போது சோர்வடைந்து ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.

    அதனால் பொங்கலுக்கு பிறகு விடுதலை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளோம். அதாவது நிரந்தர பரோல் கேட்டு மனு அளிக்க உள்ளோம்.

    தமிழக அரசையும் அணுகி வேறு வழியில் விடுதலை செய்ய வலியுறுத்தி நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Nalini and Murugan has very upset as their release is being delayed by Governor.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X