வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அன்று பாஜகவை வென்ற நோட்டா.. இன்று வாக்கு வித்தியாசத்தையே விஞ்சிய தருணம்.. கட்சிகள் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

Recommended Video

    அன்று பாஜக..இன்று அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டா- வீடியோ

    வேலூர்: ஆர் கே நகர் இடைத்தேர்தலில் பாஜகவுடன் போட்டி போட்ட நோட்டா இன்று வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு வித்தியாசத்தையே விஞ்சியுள்ளது.

    None of the Above என்பதன் சுருக்கமே NOTA ஆகும். அதாவது யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதுதான் இது. தேர்தலில் பங்குக் கொள்ளும் வேட்பாளர்களுக்கு எதிராக யாருக்கும் வாக்களிக்கவில்லை என்பதே இதன் நோக்கமாகும்.

    இந்த நடைமுறை நவம்பர் 11 முதல் டிசம்பர் 4 வரை நடைபெற்ற டெல்லி, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியாவிலேயே முதன் முறையாக இம்முறை பயன்படுத்தப்பட்டது.

    நோட்டாவின் நோக்கம்

    நோட்டாவின் நோக்கம்

    தமிழகத்தை பொருத்தமட்டில் நீலகிரி இடைத்தேர்தலில் இந்த நடைமுறை பயன்படுத்தப்பட்டது. அதாவது வாக்குச்சீட்டு போன்ற ஒன்றில் தப்பு போன்ற குறியீடு இருக்கும் இதுதான் நோட்டாவின் சின்னமாகும். இது பயன்படுத்தப்பட்ட தேர்தலில் இருந்து இந்த சின்னத்துக்கும் கணிசமாக வாக்குகள் பதிவாகி வருகின்றன.

    இடைத்தேர்தல்

    இடைத்தேர்தல்

    இன்னும் கேட்டால் முக்கிய கட்சிகளுடனேயே போட்டி போடும் அளவுக்கு நோட்டா குறித்த விழிப்புணர்வு மக்களிடம் உள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது தொகுதியான ஆர் கே நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    எத்தனை வாக்குகள்

    எத்தனை வாக்குகள்

    2017-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த தேர்தலில் அமமுகவின் டிடிவி தினகரன் 89 ஆயிரத்து 13 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தில் மதுசூதனனும் மூன்றாம் இடம் திமுகவின் மருது கணேஷும் பெற்றனர். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கலைக்கோட்டுதயம் 3,802 வாக்குகளை பெற்றார்.

    நாடாளுமன்றத் தேர்தல்

    நாடாளுமன்றத் தேர்தல்

    பாஜகவின் நாகராஜ் 1,38 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். ஆனால் நோட்டாவோ பாஜக முந்தி 2,373 வாக்குகளை பெற்றது. இதன் வாக்குச் சதவீம்த 1.34 ஆகும். அது போல் இந்த வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று முடிவாகின.

    அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

    அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

    இதில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி ஆகியன போட்டியிட்டன. திமுகவின் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். இவர் ஏசி சண்முகத்தை விட 8,141 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடம் ஏசி சண்முகத்துக்கு , 3-ஆவது இடம் நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமிக்கு கிடைத்தது. இதில் நோட்டா பெற்ற வாக்குகள் 9,417 ஆகும். இது திமுக பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாகும். இதனால் அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    English summary
    Nota beats the voting difference between Kathir Anand and AC Shanmugam in Vellore Loksabha elections 2019.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X