வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இத்தனை செய்தும்.. எங்களுக்கு ஏன் மக்கள் வாக்களிக்கவில்லை.. ஓபிஎஸ் உருக்கம்

Google Oneindia Tamil News

வேலூர்: அதிமுகவுக்கு மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை என புரியவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

வேலூருக்கு வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஏசி சண்முகம், திமுக சார்பில் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதை அடுத்து வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகன் மாயம்.. நேத்ராவதி ஆற்றில் தேடும் பணி தீவிரம் முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகன் மாயம்.. நேத்ராவதி ஆற்றில் தேடும் பணி தீவிரம்

பிரசாரம்

பிரசாரம்

அந்த வகையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் ஏசி சண்முகத்தை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் செய்தார்.

காவிரி நீரை கேட்கவில்லை

காவிரி நீரை கேட்கவில்லை

அப்போது அவர் பேசுகையில் ஏசி சண்முகம் எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவுக்காக பணியாற்றியவர். அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். கருணாநிதி ஆட்சியில் காவிரி தண்ணீரை கேட்டு பெறவில்லை.

முதல்வராகலாம்

முதல்வராகலாம்

ஸ்டாலின் பல சூழ்ச்சிகள் செய்தாலும் அவரால் முதல்வராக முடியாது. அதிமுக ஆட்சியில் தொண்டன் கூட முதல்வராகலாம். ஆனால் அது திமுகவில் நடக்காது.

புரியவில்லை

புரியவில்லை

மக்களை பாதிக்கும் எந்த திட்டங்களையும் அதிமுக அரசு அனுமதிக்காது. எனினும் மக்கள் அதிமுகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என புரியவில்லை என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

English summary
Deputy CM O. PaneerSelvam asks Why people are not voting for ADMK in Loksabha elections held on April 18?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X