வாயும் வயிறுமாக இருந்த தனலட்சுமி.. தூக்கில் சடலமாய்.. பதறிப் போய் கதறிய பெற்றோர்!

வேலூர்: வாயும் வயிறுமாக இருந்த தனலட்சுமி தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு பெற்றவர்கள் கதறியே போய்விட்டனர்!
ராணிப்பேட்டையை அடுத்த நரசிங்கபுரம் பகுதியை செல்வா. இவருக்கு தனலட்சுமி என்ற பெண்ணுடன் 3 வருடங்களுக்கு முன்பு கல்யாணம் ஆனது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

இப்போது மீண்டும் தனலட்சும் 4 மாத கர்ப்பமாக இருந்தார். ஆனால் தம்பதிக்குள் அடிக்கடி சண்டை இருந்து கொண்டே இருந்துள்ளது.2 நாளைக்கு முன்பும் இருவரும் சண்டை போட்டுள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இப்படி தினமும் சண்டை வந்து கொண்டே இருந்ததால், தனலட்சுமி மனம் நொந்து போனார்.
அதனால் அன்றைய தினம் விடிய விடிய அழுது கொண்டே இருந்திருக்கிறார். ஆனால் செல்வா, தனலட்சுமி தூங்காமல், அழுது கொண்டே இருந்தது தெரிந்தும் சமாதானம் செய்யாமல், வழக்கம்போல் காலையில் எழுந்து வேலைக்கு போயிவிட்டார்.
ஏற்கனவே நொந்து போய் இருந்த தனலட்சுமி இதனால் இன்னும் அழுகையை அடக்க முடியாமல், வீட்டுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அக்கம்பக்கத்தினர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கவும், அவர்கள் விரைந்து வந்து சடலத்தை மீட்டு செல்வாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கர்ப்பிணி மகளை பார்த்து பெற்றோர் கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!