வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுங்க.. பகீர் கிளப்பும் ராஜேந்திர பாலாஜி

Google Oneindia Tamil News

Recommended Video

    Rajendra Balaji Press Meet | முதல்வருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுங்க: ராஜேந்திர பாலாஜி பகீர்

    வேலூர்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வெளிநாட்டு இயக்கங்களின் மூலம் சதி நடப்பதாகவும் எனவே அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

    வேலூர் விகே புரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் லோக்சபா தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த .கூட்டத்திற்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார்.

    rajendra balaji demand central govt should Z Plus security to tn cm palaniswami

    அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில் " ஸ்டாலின் வாயில் வருவது எல்லாமே பொய்தான். தொடர்ந்து பிரச்சனைகளை உருவாக்கி இளைளுர்களை சிந்திக்க விடாமல் செய்து வருகிறார். இவருக்கு வேண்டியவர்களை கண்ணை மூடி கொண்டு ஆதரிப்பார், வேண்டாதவர்களை கண்ண மூடி கொண்டு எதிர்ப்பார்.

    ஒரு பெண் என்றும் பாராமல் மேயர் உமாமகேஸ்வரியை கழுத்தை அறுத்து கொன்றவர்கள் திமுகவினர். .ஆனால் குற்றவாளிகளை 3 நாட்களில் கண்டுபிடித்தது தமிழக போலீஸ். அந்த அளவிற்க்கு ஸ்காட்லாந்து போலீஸ்க்கு இணையான நுண்ணறிவு உள்ள துறையாக காவல்துறை விளங்குகிறது.

    எடப்பாடியார் ஆட்சியில் சட்டம் ஓழங்கு சீராக உள்ளது. ஸ்டாலினுக்கு ஒரே வேலை எடப்பாடி யாரை கூறை கூறுவது மட்டும் தான். சில நாட்களில் ஆட்சி கவிழ்ந்து விடும் என்று கூறினார், ஆனால் 3 பட்ஜெட் தாக்கல் செய்யபட்டுவிட்டது. எடப்பாடியார் ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது.

    வெளிநாட்டு இயக்கங்களின் மதம் சார்ந்த , இனம் சார்ந்த, மொழி சார்ந்த சதி திட்டங்கள் தமிழக முதல்வருக்கு எதிராக தீட்டப்பட்டு வரப்படுகிறது. மக்களை நோக்கி முதல்வர் பழனிச்சாமி வேகமாக செல்கிறார். அவரை பாதுகாப்பது நமது கடமை ஆகும். எனவே முதல்வர் பழனிச்சாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்" இவ்வாறு கூறினார்.

    English summary
    Minister rajendra balaji on vellore lok sabha eletion: he demand that central govt should Z Plus security to tn cm palaniswami
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X