வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம், இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை - ரஜினி ரசிகர்கள் போஸ்டர்

ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி அழைத்து களைத்துப்போன ரசிகர்கள் இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை என்று கூறி போஸ்டர் ஒட்டி அழைத்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம், இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை மாற்றத்தைப் பற்றி சிந்திக்கும் மக்களும் மக்களைப் பற்றி சிந்திக்கும் நீங்களும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறி வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பது அவரது ரசிகர்களின் 30 ஆண்டுகால விருப்பம். 1996ஆம் ஆண்டு முதலே அவரை அரசியலுக்கு அழைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் ரஜினிகாந்த் அவ்வப்போது வாய்ஸ் கொடுத்ததோடு சரி அதன்பின்னர் சினிமாவில் நடிக்க போய்விடுவார் ரஜினிகாந்த்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தான் அரசியலுக்கு வரப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். ஆனாலும் 3 ஆண்டுகளாக ரஜினியின் செயல்பாடு குறித்து மற்றவர்கள் பேசினாலும் உறுதியாக ரஜினி எதையும் கூறவில்லை. ஆன்மீக அரசியல் நேர்மையான ஊழலற்ற அரசியலில் ஈடுபடப்போவதாக கூறி வருகிறார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் தமிழகத்தில் எழுச்சியை உருவாக்குவார்... சொல்வது யார் தெரியுமா..? ரஜினிகாந்த் தமிழகத்தில் எழுச்சியை உருவாக்குவார்... சொல்வது யார் தெரியுமா..?

ரஜினி அரசியல் பேச்சு

ரஜினி அரசியல் பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மார்ச் 12ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அதில் தான் அரசியலுக்கு வந்தாலும் முதல்வர் இல்லை. நல்லவர், நேர்மையானவர், அறிவாளியாக உள்ள ஒருவரை முதல்வராக அமர்த்தி ஒரு குழு ஆட்சிக்கு வழிகாட்டும் என்று ரஜினி தெரிவித்தார்.

அரசியல் எழுச்சி வரவேண்டும்

அரசியல் எழுச்சி வரவேண்டும்

இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அதிகம் வாய்ப்பு தர உள்ளதாகத் தெரிவித்தார். அரசியலில் பணம் செலவழிப்பது இல்லாமல் மக்கள் அலை ஒன்று, எழுச்சி ஒன்று உருவாகவேண்டும், அதை ரசிகர்களும், ஊடகங்களும் உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ரஜினி பேச்சு ட்ரெண்ட்

ரஜினி பேச்சு ட்ரெண்ட்

மக்களிடம் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்தால் தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன். அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம், இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்று கூறியிருந்தார் ரஜினிகாந்த். ரஜினியின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது. இதற்கு நன்றி கூறி ட்வீட் போட்டார் ரஜினிகாந்த். தற்போது அதே கருத்தை மையமாக வைத்து போஸ்டர் ஒட்டி ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைத்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

ரசிகர்கள் அழைப்பு

ரசிகர்கள் அழைப்பு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதிகளில் இன்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போ இல்லைன்னா எப்பவுமே இல்லை. மக்களைப் பற்றி சிந்திக்கும் நீங்களும், மாற்றத்தை விரும்பும் மக்களும் ஒருங்கிணைய வேண்டும் என்றும் கூறியுள்ளனர் ரசிகர்கள். ரஜினிகாந்த் தன்னுடைய மவுனத்தை எப்போது கலைக்கப்போகிறாரோ தெரியலையே.

English summary
Fans who were tired of bringing Rajini into politics have put up a poster saying that it is not now or never. Political change ... government change, now or never.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X