வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்.. ராமதாஸ் உறுதி

Google Oneindia Tamil News

அரக்கோணம்: அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அக்கட்சியின் சார்பில் ஏ.கே. மூர்த்தி போட்டியிடுகிறார்.

இவரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ், மாம்பழ சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது பழைய பஸ் நிலையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் அவர் பேசினார்.

மீண்டும் லடாய்.. அன்புமணி பேச்சால் அதிமுகவினர் அதிருப்தி மீண்டும் லடாய்.. அன்புமணி பேச்சால் அதிமுகவினர் அதிருப்தி

முதல்வரிடம்

முதல்வரிடம்

அவர் பேசுகையில் தமிழகத்தில் வேலூர் மாவட்டம் 13 சட்டசபை தொகுதிகளை கொண்ட மிகப் பெரிய மாவட்டமாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்துவேன்.

தலையெழுத்து

தலையெழுத்து

மேலும் அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுவது உறுதி. பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி பாமகதான். நாட்டின் தலையெழுத்தை மாற்றும் சக்தி அவர்களுக்கு உண்டு.

 நிர்வாக இயக்குநர்கள்

நிர்வாக இயக்குநர்கள்

தமிழகத்தில் திமுக கட்சி கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநராக ஸ்டாலினும் நிர்வாக இயக்குநர்களாக அவரது மகன், மருமகன் என செயல்பட்டு வருகின்றனர்.

ஆலோசனை

ஆலோசனை

இவர்களுக்கு ஆலோசகர்களாக அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் இருந்து வருகின்றனர். இவர்களது ஆலோசனையின் பேரில்தான் நடந்து கொண்டால் திமுக முடிவுக்கு வந்துவிடுவது உறுதி என்றார் ராமதாஸ்.

English summary
PMK Founder Ramadoss says that if PMK win in Arakkonam then it will be formed as new district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X