வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டாக்டர் எங்கே.. ஆஸ்பத்திரி வாசலில் 2 சடலங்களுடன் போராட்டம்.. பரபரப்பில் ராணிப்பேட்டை.. என்ன நடந்தது?

ராணிப்பேட்டையில் பிரசவத்தில் தாய்-சேய் உயிரிழந்ததால் முற்றுகை போராட்டம் நடக்கிறது

Google Oneindia Tamil News

ராணிப்பேட்டை: அர்ச்சனா என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு சரியான சிகிச்சை அளிக்காததால், உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது. இதனால் ராணிப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன்..இவர் ஒரு கூலித் தொழிலாளி.. 23 வயதாகிறது.. இவரது மனைவி அர்ச்சனா.. 19 வயது ஆகிறது.. கல்யாணமாகி ஒன்றரை வருடமாகிறது.. அர்ச்சனா நிறைமாத கர்ப்பிணி ஆவார்.. இந்நிலையில், இன்று விடிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

Ranipet woman died in Hospital and public Protest

அதனால், அவரை ராணிப்பேட்டையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்பத்தினர் அனுமதித்தனர்.. ஆனால், பிரசவம் முடிந்த அடுத்த சில நிமிடங்களிலேயே குழந்தை இறந்துவிட்டது.. பிறகு அர்ச்சனாவுக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டது.. ஆனால் அர்ச்சனாவும் இறந்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் முற்றுகை போராட்டத்தில் இறங்கினர்.. இந்த சம்பவத்தினால் அந்த பகுதியே இன்று காலையில் இருந்து பரபரப்பாகி விட்டது.

இதுகுறித்து என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்தோம்.. விடிகாலை 3 மணி அளவில் அர்ச்சனாவுக்கு பிரசவ வலி வந்துள்ளது.. அதனால்தான் அருகில் இருந்த இந்த ஆஸ்பத்திரியில் உடனடியாக அனுமதித்துள்ளனர்.. அப்போது நைட் டியூட்டியில் 2 நர்ஸ்கள், அவருக்கு ஒரு அசிஸ்டெண்ட் இருந்துள்ளனர்.. அர்ச்சனாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக பிரசவம் பார்க்கப்பட்டது.

சரியாக 3.30 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது... ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த குழந்தை இறந்துவிட்டது.. இதையடுத்து, அர்ச்சனாவுக்கு உடல்நிலை மோசமானது.. அதனால் தீவிர சிகிச்சை தரப்பட்டது.. எவ்வளவோ முயற்சித்தும், காலை 7 மணிக்கு அர்ச்சனாவும் உயிரிழந்துவிட்டார்.. அடுத்தடுத்த கொஞ்ச நேரங்களிலேயே 2 மரணங்களை கண்டு குடும்பத்தினர் ஷாக் ஆனார்கள்.

இந்த விஷயம் உறவினர்கள், அந்த பகுதி மக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டுவிட்டனர்.. 2 சடலங்களை ஆஸ்பத்திரி வாசல் முன்பு போட்டு விட்டு, போராட்டத்திலும் இறங்கிவிட்டனர்.. அந்த ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் வாக்குவாதமும் செய்தனர்.

இதற்கு பிறகுதான், ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிந்து விரைந்து வந்தனர்.. எவ்வளவோ அவர்களிடம் சமாதானம் செய்து பார்த்தும், முடியவில்லை. நைட் டியூட்டியில் டாக்டர்கள் ஏன் ஆஸ்பத்திரியில் இல்லை.. வெறும் நர்ஸ்கள் மட்டும் இருந்தால் எப்படி பிரசவம் பார்ப்பது? அவங்களுக்கு என்ன தெரியும்?

மூளையில் ரத்த கசிவு, மூச்சு திணறல்.. கடைசி நேரத்தில் எஸ்பிபிக்கு நேர்ந்தது என்ன? டாக்டர்கள் விளக்கம்மூளையில் ரத்த கசிவு, மூச்சு திணறல்.. கடைசி நேரத்தில் எஸ்பிபிக்கு நேர்ந்தது என்ன? டாக்டர்கள் விளக்கம்

முறையாக சிகிச்சை தந்திருந்தால், 2 உசுரு போயிருக்குமா? ஒருவேளை பிரசவம் பார்க்க தெரியவில்லை என்றால், பக்கத்திலேயே இருக்கிற வாலாஜா ஆஸ்பத்திரிக்காவது அனுப்பி வெச்சிருக்கலாம்.. வேலூர் ஆஸ்பத்திரியாவது போயிருப்போம்.. எதுவுமே சொல்லாமல், 4 மணி நேரம் என்ன சிகிச்சை தந்தாங்கன்னும் சொல்லாமல் இருந்துட்டாங்க" என்று ஆவேசமாக சொன்னார்கள்.

போலீசார் சமாதானப்படுத்த முடியாமல் திணறிய நேரம், ராணிப்பேட்டை எம்எல்ஏ காந்தி அங்கு விரைந்து வந்தார்.. அவர் மறுபுறம் அர்ச்சனாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி, சமாதானம் செய்தார்.. இதற்கு நடுவில், ஆஸ்பத்திரி வாசலில் கிடந்த தாய் - சேய் சடலங்களை மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்ய, வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸில் ஏற்றினர்.

ஆனால், இதை பார்த்து உறவினர்கள் மேலும் கொந்தளித்தனர்.. சடலங்களை ஏற்றி கொண்டு கிளம்பிய ஆம்புலன்ஸை வழிமறித்து மறியல் செய்தனர்.. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

English summary
Ranipet woman died in Hospital and public Protest
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X