• search
வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தன்வந்திரி பீடத்தில் சமத்துவ பொங்கல் விழா சமயநூல்கள் பரிசளிப்பு

|

வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 15.01.2019 செவ்வாய்கிழமை 15 ம் ஆண்டு சமத்துவ பொங்கலுடன் சமயநூல் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

பண்டைய காலங்களில் ஆன்மிக நுல்கள் படிப்பது என்பது அனைத்து மக்களிடமும் இருந்து வந்தது. படித்த அந்த கருத்துக்களை பிள்ளைகளிடம், பேரக் குழந்தைகளிடம் கதைகளாக சொல்லி நல்லொழுக்களைக் கற்றுக்கொடுத்து வளர்த்து வந்தனர். இன்றைய டிஜிட்டல் காலக்கட்டத்தில் நூல்கள் படிப்பது என்பது அரிதாகி விட்டது.

Samathuva pongal celebration at Danvantri peedam Walajapet

தாத்தா, பாட்டிகள் கதை சொல்வது குறைந்து விட்டது. பெற்றோர்கள் பிள்ளைகளுடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதே குறைந்து விட்டது. அதர்க்கும் மேல் அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதே குறைந்து விட்டது. ஒவ்வொருவரும் அலைபேசியிலையே நேரத்தை செலவழித்து கொண்டிருக்கிறார்கள். ஏன் என்றால் அதில் சந்தேகமில்லை.

ஒரு இளைஞனை நிறுத்தி! நீ குருமார்கள் எழுதிய புத்தகங்களை படிக்கும் பழக்கம் உண்டா என்று கேட்டால், குருமார்களா அப்படியென்றால் யார் என்று கேட்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலை மாற வேண்டுமானால் தெய்வங்களாலும், குருமார்களாலும் மனித வளர்ச்சிக்காகவும், பண்பாட்டிற்காகவும் எழுதப்பட்ட எண்ணற்ற நுல்கள் உள்ளன. ஏன் இன்னும் அச்சில் ஏறாத பழைய ஓலைச் சுவடிகள் கூட உள்ளன எனலாம்.

Samathuva pongal celebration at Danvantri peedam Walajapet

அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவராம், மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் போன்ற பன்னிரு திருமுறைகள், மற்றும் கம்பராமாயணம், திருவிளையாடல் புராணம், கண்ணனின் பகவத்கீதை, மஹாபாரதம், திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், அதே போல் 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தம், கிறிஸ்துவின் வேதாகமம், அல்லாவின் குரான் என பலவிதமான நுல்கள் இருந்து வருகின்றன. மேலும் பல மகான்கள் எழுதிய பல்வேறு நூல்களும் உள்ளன.

Samathuva pongal celebration at Danvantri peedam Walajapet

ஆன்மிகம் வளரவும், நற்சிந்தனைகள் தழைத்தோங்கவும், அவரவர்களின் மத குருமார்களையும், தெய்வங்களையும் பக்தியுடனும், சிறத்தையுடனும் வழிபட வேண்டியும், நல் ஒழுக்கமும், மனித நேயமும், மத நல்லிணக்கமும், தர்ம சிந்தனைகளும், தழைத்தோங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் குருவருளுடன் தமிழர் திருநாளில் 15.01.2019 செவ்வாய்கிழமை பகல் 12.00 மணி முதல் 1.00 மணிவரை சமத்துவ பொங்கல் வழிபாட்டுடன் சமயநூல் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

Samathuva pongal celebration at Danvantri peedam Walajapet

 
 
 
English summary
Samathuva pongal celebration at Danvantri peedam Walajapet.A novel scheme of free distribution of spirituality books will also be distributed to motivate children to learn about Indian spirituality, religion and the spiritual greats of the past.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X