வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலூரில் ரத்தான லோக்சபா தேர்தல் எப்போது?.. சத்யபிரதசாஹூ பதில்

Google Oneindia Tamil News

Recommended Video

    Satyapradha sahoo: 43 இடங்களுக்கு மறுவாக்கு பதிவு இல்லை.. சத்யபிரதசாஹூ விளக்கம்- வீடியோ

    சென்னை: வேலூரில் ரத்தான லோக்சபா தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ தெரிவித்தார்.

    நாடு முழுவதும் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. இந்த நிலையில் ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது.

    Satyapradha Sahoo replies about Vellore MP election

    இந்த நிலையில் வாக்குப் பதிவு நடத்துவதற்கு முன்பாக வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும் வேலூர் எம்பி தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் பள்ளி மற்றும் கல்லூரியிலும் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.

    13-இல் மறுவாக்கு பதிவு ஏன்?.. 43 இடங்களுக்கு மறுவாக்கு பதிவு இல்லை.. சத்யபிரதசாஹூ பரபரப்பு விளக்கம் 13-இல் மறுவாக்கு பதிவு ஏன்?.. 43 இடங்களுக்கு மறுவாக்கு பதிவு இல்லை.. சத்யபிரதசாஹூ பரபரப்பு விளக்கம்

    இதில் ரூ. 10 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அது மட்டுமல்லாமல் திமுக பிரமுகர் வீட்டிலிருந்து வார்டு எண், தெரு பெயருடன் கூடிய கட்டுக் கட்டாக பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து வேலூர் நாடாளுமன்றத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார்.

    இந்த நிலையில் வேலூர் தேர்தலை நடத்த கோரி அதிமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஏசி சண்முகம் நீதிமன்றத்தை நாடினார். எனினும் பலனில்லை. இந்த நிலையில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ விளக்கினார்.

    அப்போது அவரிடம் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதில் அளிக்கையில் வேலூரில் ரத்தான லோக்சபா தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் எந்த பதிலையும் அளிக்கவில்லை என சாஹூ தெரிவித்தார்.

    English summary
    Tamilnadu Chief Electoral officer say that Election Commission is not giving any consent to conduct Vellore Loksabha elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X