வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்திக்காரன்கிட்ட அடிமையா இருக்கிறதுக்கு இங்கிலீஷ்காரன்கிட்ட இருக்கலாம்.. அவன் டீசன்ட்.. சீமான் நச்

கொட்டும் மழையில் சீமான் வேலூரில் பிரச்சாரம் செய்தார்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆம்பூரில் சீமான் தேர்தல் பரப்புரை- வீடியோ

    வேலூர்: "இந்திக்காரன்கிட்ட அடிமையா இருக்கிற கருமத்துக்கு இங்கிலீஷ்காரன்கிட்டயே இருக்கலாம்.. அவன் டீசன்ட் ஃபெல்லோ" என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    வேலூர் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார்.

    நல்லா ஞாபகம் வச்சுக்கங்க.. அடுத்த தேர்தல் எங்களை மையப்படுத்தித்தான் இருக்கும்.. சீமான் அதிரடி நல்லா ஞாபகம் வச்சுக்கங்க.. அடுத்த தேர்தல் எங்களை மையப்படுத்தித்தான் இருக்கும்.. சீமான் அதிரடி

    அவர் பேச ஆரம்பித்த போதே மழை பெய்தது. இருந்தாலும் மழையில் நனைந்தவாறே சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கருமம்

    கருமம்

    "இந்தி படித்தால் வேலை கிடைக்கும்னு சொல்றீங்க சரி, ஆனால் இந்தியை தாய்மொழியை கொண்ட மாநிலங்களில் நீங்கள் தன்னிறைவு அடைந்துவிட்டீர்களா? எனக்கு என்ன தோணுதுன்னா, இந்திக்காரன்கிட்ட அடிமையா இருக்கிற கருமத்துக்கு, இங்கிலீஷ்காரன்கிட்டயே அடிமையா இருந்துட்டு போயிடலாம். அவன் இன்னும் ரொம்ப டீசன்ட் ஃபெல்லோ.

    தாய்மொழி

    தாய்மொழி

    நுட்பமா பாரு.. அவன் துப்பாக்கி வெச்சிட்டு எல்லாரையும் என் மதத்தை பின்பற்றுன்னு சொல்லியிருந்தா, எல்லோரும் பின்பற்றியிருப்பான். முகலாயர் வரும்போது, எல்லாரும் முஸ்லீமா மாறுன்னு சொல்லியிருந்தா மாறியிருப்பான். ஆனால் அவன் மாத்தல. என் மொழியை கற்றே தீரவேண்டும் என்று கட்டாயப்படுத்தல. என் தாய்மொழியை கத்துக்கிட்டு உலகம் முழுக்க பரப்பினான்.

    சமஸ்கிருதம்

    சமஸ்கிருதம்

    இந்தியை படி.. இந்தியை படி..ன்னு இங்கே! ஒன்னு வாங்கினால் ஒன்னு ஃப்ரீன்னு சொல்லுவாங்களே.. அந்த மாதிரி இந்தி படிச்சால் சமஸ்கிருதம் கொசுறு. காய்கறி வாங்கினால் கொத்தமல்லி கொசுறு மாதிரி" என்று சீமான் இவ்வாறு தொடர்ந்து பேசிகொண்டே போனார். அவர் பேசி முடிக்கும் வரையில் மழை பெய்துகொண்டே இருந்தது. மழையில் நனைந்தவாறு கட்சி தொண்டர்களும் அவர் பேச்சை ஆர்வமாக கேட்டனர்.

    அதே வேட்பாளர்

    அதே வேட்பாளர்

    பிறகு ஆம்பூரில் பிரச்சாரம் செய்யும்போது, "நாங்கள் ஓட்டுக்காக பேசவில்லை. நாட்டுக்காக பேசி வருகிறோம். மக்களை நம்புகிறோம். தனித்து போட்டியிடுகிறோம். வேலூரில் திமுக வேட்பாளர் வீட்டில் பணம் பிடிபட்ட காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. ஆனால் என்ன நடவடிக்கை எடுத்தாங்க? திரும்ப அவரே வேட்பாளராக இப்ப இருக்கிறார். இதுக்கு அப்பவே தேர்தலை நடத்தியிருக்கலாமே. தொடர்ந்து நாங்க தோல்வியை சந்தித்தாலும் சரி.. மக்கள் ஒருநாள் எங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் வரும். அதுவரை தொடர்ந்து போராடுவோம்" என்றார்.

    English summary
    Naam Tamilar party Seeman campaign in Vellore and Ambur for Candidate Deepalakshmi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X