• search
வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

இவர் "காமாசோமா" கிடையாது.. "ஹோமோ".. ஆண்களை மட்டும்தான்.. 2020ன் திகில் சாமியார்!

|

வேலூர்: வருஷம் ஒரு சாமியாராவது சர்ச்சையில் தவறாமல் சிக்கிகொள்கிறார்கள்... அந்த வகையில் இந்த வருடம் வேலூர் சாமியார் சிக்கிவிட்டார்.. இவருக்கு வெறும் ஆண்கள்தான் பிடிக்குமாம்.. பாலியல் தொல்லை தந்து கொண்டே இருப்பாராம்.. நெருக்கமாக இருப்பாராம்.. இந்த வருட இறுதியில் இப்படிப்பட்ட தகவல்களுடன் பரபரத்து காணப்பட்டது இந்த சாமியார் செய்தி.. இதற்கு மற்றொரு காரணம், இந்த சாமியார் பாஜக பிரமுகர்களுடன் தொடர்பில் இருந்ததுதான்!

வேலூர் மாவட்டம் திருவலம் பகுதியில், ஸ்ரீ ஸர்வமங்கள பீடத்தை நிறுவி, அதன் மடாதிபதியாக வலம்வந்தவர் சாந்தகுமார்.. இதுதான் இவரது நிஜமான பெயர்.. இவர் சாமியாராக மாறிய பிறகு சாந்தா சுவாமிகள் என்று வைத்து கொண்டார்.

ஆரம்பத்தில் ஒரு அரசு வேலையில் இருநதுள்ளார்.. பிறகுதான் ஸ்ரீபுரம் தங்கக்கோயில் சாமியாரான சக்தி அம்மாவுக்கு சேவை செய்வதற்காக அந்த வேலையை , தங்கக்கோயில் பணிக்கு வந்தார்.. பிறகு அங்கிருந்த சாமியாரிடம் ஏதோ பிரச்சனை செய்துவிட்டு, தனியாக ஆன்மீக பணிகளை செய்துள்ளார்.. அப்போதுதான் பாஜக, இந்து அமைப்புகளின் தலைவர்கள் பலர் சாமியாருக்கு நெருக்கமாக இருந்துள்ளனர். செல்வாக்கும் கூடியுள்ளது.. சொகுசு காரில் போய்தான் பூஜை, விழாக்களே செய்வாராம்.

 சாமியார்

சாமியார்

பிறகு, இந்து ஆச்சார்ய சபா என்ற அமைப்பின் தமிழக தலைவராக 3 வருடங்களுக்கு முன்பு சாமியாரை நியமித்துள்ளனர்.. அங்கும் சக சாமியார்களிடம் தகராறு செய்திருக்கிறார். அதுமட்டுமல்ல, தன்னிடம் யாராவது வசதியான பக்தர்கள் வந்தால், அவர்களிடம் பிசினஸ் சம்பந்தமாக பேசுவாராம்.. பிறகு பெங்களூரில் தன்னுடைய நண்பர் கமலக்கார ரெட்டி என்பவர் இருப்பதாகவும், அவரிடம் பணத்தை முதலீடு செய்தால், பணம் இரட்டிப்பாகும் என்று சொல்லி பணத்தை கறந்துள்ளார்.

மோசடி

மோசடி

பணத்தை தந்து ஏமாந்த பக்தர்கள், பணம் கேட்டால் "சூனியம் வைத்துவிடுவேன், கை, காலை செயலிழக்க செய்துவிடுவேன்" என்று சாமியார் மிரட்டுவாராம். இப்படித்தான் 4 பக்தர்களிடம் 65 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளார். அது சம்பந்தமாக புகார் வரவும்தான், ராணிப்பேட்டை போலீஸார் சாமியாரை கைது செய்து அரக்கோணம் ஜெயிலில் அடைத்தனர்.

 ஆண் பக்தர்கள்

ஆண் பக்தர்கள்

இதை பற்றி விசாரிக்கும்போதுதான், பாலியல் பிரச்சனை வெடித்தது.. இந்த சாமியாருக்கு ஆண் பக்தர்கள்தான் அதிகம் பிடிக்குமாம்.. அவர்களிடம் பாலியல் சீண்டல்கள் செய்வாராம்.. ஃபேஸ்புக் பக்கத்தில், மெசேஞ்சரில் பக்தர்களிடம் ஆபாசமாக பேசுவராம். பாலியலுக்கு அழைப்பும் விடுப்பாராம்.. அப்போது தன்னுடைய ஆபாச போட்டோவையும் அந்த மெசேஞ்சரில் ஷேர் செய்வார்... அதை பார்த்து யாராவது விருப்பமுடையவர்கள் முன்வந்தால், அவர்களை தன்னுடைய இடத்துக்கு வரவழைத்து நெருக்கமாக இருப்பார்.. ஒருவேளை சாமியாரின் செயலை பிடிக்காதவர்கள், அவரது நம்பரை பிளாக் செய்துவிட்டு போய்விடுவார்களாம்.

பகுத்தறிவு

பகுத்தறிவு

எவ்வளவுதான் விஞ்ஞானம், தொழில் நுட்பம் வளர்ந்தாலும், படிப்பறிவு விகிதாச்சாரம் வருடம் தவறாமல் உயர்ந்து வந்தாலும், இதுபோன்ற சாமியார்களிடம் அப்பாவிகள் சிக்கிகொள்வது தொடர்கதையாகி விடுகிறது.. ஏமாறுபவர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் என்ற யதார்த்தம் இருந்தாலும், இன்னும் விழிப்புணர்வும், போதுமான பகுத்தறிவும் சிலருக்கு தேவையோ என்ற அக்கறை கேள்வியும் எழுகிறது!

 
 
 
English summary
Shocking Crime News 2020: Molestation charges on Vellore Fake priest
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X