வேலூர் அரசு ஆஸ்பத்திரியின் பிரசவ வார்டில் பெண் வேஷம் போட்டு வந்த ஆண்.. தர்ம அடி.. பகீர் காரணம்
வேலூர்: வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பெண் வேஷம் போட்டு குழந்தை திருட வந்த நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸ் வசம் ஒப்படைத்தனர்.

பொதுவாக அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளை திருடும் நோக்கில் சில பெண்கள் அடிக்கடி உலா வரும் சம்பங்கள் தமிழகத்தில நடப்பதுண்டு. எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் குழந்தையை யாராவது தூக்கி செல்லும் சம்பவங்களும் நடந்தது.
இதையடுத்து தமிழக அரசு குழந்தைகள் திருடு போகமால் தடுகக சிசிடிவி கேமரா பொறுத்தி தீவிரமாக கண்காணித்தது. அத்துடன் தாய்சேல வார்டுகளில் கண்காணிப்பையும் கடுமையாக தீவிரப்பபடுத்தியது. இதனால் குழந்தை திருட்டு சம்பங்கள் அரிதிலும் அரிதாகவே நடக்கிறது.

வேலூர் மருத்துவமனை
இந்நிலையில் வேலூரின் அடுக்கம்பாறை பகுதியில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு பெண்கள் மற்றும், பிரசவ பகுதி தனித்தனியாக அமைந்து உள்ளது. இந்த மருத்துவமனை தான் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் பகுதி மக்களுக்கு மிக முக்கியமான அரசு மருத்துவமனையாகும்.

சந்தேகம் அடைந்த மக்கள்
இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுடிதார் அணிந்த டிப்பாப் தோற்றத்துடன் ஒரு பெண் பெண்கள் மற்றும் குழந்தை பிரிவு பகுதியில் சுற்றி கொண்டு இருந்து உள்ளார்.
சுமார் இரண்டு மணிநேரம் சுற்றி திரிந்து வந்த நிலையில் அங்கு இருந்து நோயாளிகளின் உறவினர்கள் இவரை சந்தேகத்தோடு அணுகி விசாரனை செய்து உள்ளனர்.

தர்ம அடி
அப்பொழுது அந்த பெண்ணின் குரல் ஆண் குரல் போல் இருப்பதை அறிந்து கூட்டம் சேர்ந்து அவர்கள் பாணியில் விசாரித்து உள்ளனர். இதில் அவர் தலையில் அணிந்து இருந்த டோப்பா கீழே விழுந்து அவர் பெண் வேடமிட்ட ஆண் என்று தெரிய வந்து உள்ளது.

திருநங்கை என தகவல்
அவரை நையப்புடைத்த பொதுமக்கள் அடுக்கம்பாறை புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளனர். பெண் வேடமடைந்து மருத்துவ மனைக்கு வந்தவர் பெயர் கரிகாலன் என்றும் இவர் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் என்றும் தற்பொழுது இவர் திருநங்கையாக மாறிவருகிறார் என்றும் கூறப்படுகிறது.

என்ன காரணம்
இவர் எதற்க்காக நள்ளிரவில் மருத்துவமனை வளாகத்தில் சுற்றி கொண்டு இருந்தார், உண்மையிலே குழந்தை திருட தான் வந்தாரா என்று தெரிய சம்பத்தபட்ட எல்லைக்குட்பட்ட தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளரிடம் கேட்ட பொழுது இப்படி ஒரு சம்பவம் நடந்ததே எங்களுக்கு தெரியாது என்றார்கள். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு காவல் துறை விழித்து கொள்ள வேண்டும் என்று அப்பகுதி சமுக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.