வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தா... ஆரம்பிச்சிட்டாங்க இல்லே.. வந்தாச்சு வேலூருக்கு தேர்தல்.. தொடங்கிருச்சு நகை, பண ரெய்டு!

வாகன சோதனையில் 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன

Google Oneindia Tamil News

வேலூர்: வேலூர் தொகுதியில் வாகன சோதனையில் ஏராளமான தங்க நகைகள், பணம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

வேலூரில் 5-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதியிலும் 24 மணி நேரம் செயல்படும் வகையில் சுழற்சி முறையில் 3 குழுக்கள் வீதம் 18 பறக்கும் படை, 18 நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

Three KG worth Gold seized in Vellore

வாகன சோதனையின்போது, ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் அல்லது 10 ஆயிரத்துக்கும் மேல் தேர்தல் தொடர்பான போஸ்டர்கள், பரிசு பொருட்கள், மதுபானம், போதைப் பொருட்கள் ஆகியவற்றை வேட்பாளரோ அல்லது முகவர்களோ கொண்டு சென்றால் அவைகளை பறிமுதல் செய்ய வேண்டும்.

குறிப்பாக, சோதனையின்போது வாகனத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் தொகை இருந்து, இதில் வேட்பாளருக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கப்பட்டால் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு!

Three KG worth Gold seized in Vellore

இதெல்லாம் மீறப்பட்டுதான், போன முறை வேலூர் தொகுதியே அமுங்கி போனது. இப்போது திரும்பவும் வாகன சோதனையில் ஏராளமானோர் சிக்கி வருகிறார்கள். வாணியம்பாடி திருப்பத்தூர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் இருந்திருக்கிறார்கள். அப்போது வாணியம்பாடி பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் அந்த பக்கம் காரில் வந்துள்ளார்.

நீட் தேர்வுக்கு ஆதரவு... விஜயகாந்துக்கு இருந்த கொஞ்ச நஞ்ச ஆதரவையும் வெச்சு செஞ்சுட்டாங்களே! நீட் தேர்வுக்கு ஆதரவு... விஜயகாந்துக்கு இருந்த கொஞ்ச நஞ்ச ஆதரவையும் வெச்சு செஞ்சுட்டாங்களே!

அவரது காரை நிறுத்தி சோதனை செய்த போது 3 கிலோ 300 மில்லி தங்க நகைகள் இருந்துள்ளது. அதற்கு உரிய ஆவணமும் இல்லையாம். அதனால் நகைகளை பறிமுதல் செய்து வாணியம்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் லூர்துசாமி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இன்னும் தேர்தல் முடிவதற்குள் எத்தனை கிலோ தங்கம், எத்தனை கோடி பணம் பிடிபட காத்துள்ளதோ தெரியவில்லை!

English summary
In Vellore constitution, officials have seized 3 kg worth of Gold in Vehicle Checking
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X