வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆண்டவரே.. பிதாவே.. மழையை குடுத்து இந்த நெருப்பை அணை.. பச்சை மரம் தீப்பிடித்து எரிந்து நாசம்!

வாணியம்பாடி அருகே இடி தாக்கியதில் 4 தென்னை மரங்கள் கருகின

Google Oneindia Tamil News

வேலூர்: இடி வந்து விழுந்ததில், நான்கு தென்னை மரங்கள் திகுதிகுன்னு தீப்பிடித்து எரிந்ததை கண்டு பொதுமக்கள் கலங்கி நின்றனர்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. உதயேந்திரம் அருகே இருக்கும் சிஸ்டர் கான்வென்ட் பகுதியிலும் பலத்த மழை கொட்டியது.

Thunder attack on coconut trees damage near Vaniyambadi

அந்த சமயத்தில் பலமான இடி இடித்தது. இதனால் பொதுமக்கள் கலங்கி போய்விட்டனர். சிறிது நேரத்தில் அந்த பகுதியில் இருந்த தென்னை மரங்கள் பற்றிக் கொண்டு எரிந்தன. அப்போதுதான் தென்னை மரங்கள் மீது இடி வந்து விழுந்ததை மக்கள் உணர்ந்தனர்.

பச்சை மரங்கள் எல்லாம் பற்றிக் கொண்டு எரிவதை கண்டு மிரண்டனர். பக்கத்தில் தீ பிடித்தாலும் தண்ணியை ஊற்றி அணைக்கலாம், ஆனால் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டு இருப்பதோ தென்னை மர உச்சியில்! இதனை அவர்களில் சிலர் வீடியோவும் எடுத்துவிட்டனர்.

 சென்னை மருத்துவமனையில் நேபாள சிறுவனுக்கு இதய அறுவை சிகிச்சை.. உதவிக்கரம் நீட்டுங்களேன்! சென்னை மருத்துவமனையில் நேபாள சிறுவனுக்கு இதய அறுவை சிகிச்சை.. உதவிக்கரம் நீட்டுங்களேன்!

அப்போது அந்த பகுதி பெண் ஒருவர், "ஆண்டவரே.. பிதாவே.. மழையை குடுத்து இந்த நெருப்பை அணை" என்று வேண்டி கொள்ளும் சத்தம் கேட்கிறது. "ஐயோ.. பச்சை மரம்" என்று சிறுவர்கள் ஆச்சரியத்துடன் பேசும் சத்தமும் கேட்கிறது. இறுதியில் 4 தென்னை மரங்கள் கருகியே விட்டன.

நல்லவேளை, இதில் யாருக்கும் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. ஒரே இடத்தில் இடி விழுந்து தென்னை மரங்கள் சாம்பலானதால் மக்கள் வேதனை அடைந்தனர்.

English summary
Heavy Rain near Vaniyambadi and four coconut trees damaged due to Thunder attack
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X