வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உயிருக்கு போராடும் சுஜித்.. பயன்படாத போர்வெல் கிணறுகளை உடனே மூடுங்கள்.. கலெக்டர்கள் அதிரடி உத்தரவு

ஆழ்துளை கிணறுகளை மூடுங்கள்.. மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    பயன்படாத போர்வெல் கிணறுகளை மூட கலெக்டர்கள் அதிரடி உத்தரவு

    வேலூர்: குழந்தை சுஜித் போர்வெல்லில் விழுந்துள்ளது, உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூடுங்கள் என்று மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணறு ஒன்றில் 2 வயது குழந்தை சுஜித் தவறி விழுந்த விவகாரம் அனைத்து தரப்பினரையும் கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறது.

    சுஜித்தின் தலையைச் சுற்றிமண் விழுந்துள்ளதால் மீட்பு பணியில் சிக்கல் நிலவுகிறது. 15 மணி நேரமாகியும் குழந்தையை மீட்க முடியவில்லை என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் ஆழ்துளை கிணறுகளை உடனே மூடுங்கள் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட, பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூடுங்கள் என்றும், போன வாரமே திறந்த நிலையில் இருந்த பல ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டதாகவும் கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    இதே போல் தேனி மாவட்டத்திலும் திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை உரிமையாளர்கள் மூட வேண்டும் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், ஆழ்துளை கிணறுகள் எல்லாம் மூடப்பட்டனவா என்பதை வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தேனி கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்ந்து கடலூர் உட்பட பராமரிக்கப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அனைத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

    English summary
    theni, vellore, and cuddalore district collectors have ordered to close down unmanaged deep wells
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X