வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்னும் 10 நாள்தான்.. பெரும் தலைகளின் ஆவேச மோதல்.. வெல்ல போவது யாரு? வேலூர் யாருக்கு?

வேலூர் தொகுதியில் கடும் போட்டியில் அதிமுக - திமுகவும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன

Google Oneindia Tamil News

Recommended Video

    வேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்.. Vellore Constitution Election

    சென்னை: வேலூர் தேர்தலின் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், யார்தான் அங்கு வெற்றி பெற போவது என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் எகிற வைத்து வருகிறது.

    இன்னும் 10 நாள்தான்... திரும்பி பார்த்தால் வேலூரில் தேர்தல் வந்துவிட போகிறது. இந்த தேர்தலை அதிமுக, திமுக இரு கட்சிகளுமே ரொம்ப சீரியஸாக பார்த்து, கையாண்டு வருகிறார்கள். இதற்கு காரணம், ஒரு தொகுதியே என்றாலும் ஆட்சி மாற்றத்துக்கு அடிகோலும் என்பதால்தான்.

    திமுகவை பொறுத்தவரை, நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஒரு சீட்தான் கிடைத்தது. இத்தனை தொகுதிகளில் நாம் ஜெயித்துவிட்டோம், அவ்வளவு ஜெயித்துவிட்டு, இந்த ஒரு தொகுதியில் மட்டும் ஜெயிக்காமல் விட்டால் அது அவமானம், அதுவும் கட்சியின் மூத்த தலைவரின் சொந்த தொகுதி.

    வேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்.. யார் கைக்கு போகும்?? வேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்.. யார் கைக்கு போகும்??

    ஈகோ

    ஈகோ

    ஏற்கனவே கறை படிந்த நிலையில் அதை உடைத்து, திமுகவை வெற்றி பெற வைப்பதே நமது லட்சியம் என்ற ஈகோ பிரச்சனை எழுந்துள்ளது. இரண்டாவது விஷயம், தமிழகத்தில் ஒரே சக்தியாக மக்கள் எங்களை நினைப்பதாலேயே எங்களுக்கு இந்த வெற்றி சாத்தியமானது என்று ஸ்டாலின் முன்னெடுத்து வரும் பிரச்சாரம்தான்.

    சாதகம்

    சாதகம்

    மூன்றாவது விஷயம், தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 4 தொகுதிகளில் திமுகவை சேர்ந்தவர்களே சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். அதனால் வேலூர் தேர்தல் முடிவு திமுகவுக்கு சாதகமானதாக சொல்லப்பட்டு வருகிறது.

    செல்வாக்கு

    செல்வாக்கு

    ஆனால் என்னதான் திமுகவுக்கு சாதக காரணங்கள் கிடைத்தாலும், அதிமுகவின் அதாவது ஏசிஎஸ்-ன் பல அதிரடிகளில் இவை எல்லாம் காணாமல் போகும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஆளும் தரப்பு ஆதரவு என்றாலும், ஏசிஎஸ்-ன் தனிப்பட்ட செல்வாக்கு என்று அங்கு உள்ளது. ஏற்கனவே சமூக ஓட்டுக்கள் விழுந்தாலும், வன்னியர் ஓட்டுக்களை கவர விஜயகாந்த், ராமதாஸ் போன்றோரின் நட்பும், கூட்டணி காரணமும் உள்ளது. இஸ்லாமியர் ஓட்டுக்களை கவர ஏற்கனவே ஏசிஎஸ், அதற்கான பிரமுகர்களை நேரிடியாக சந்தித்து பேசியதாகவும் சொல்லப்பட்டது.

    ஆதங்கம்

    ஆதங்கம்

    அதனால் என்னதான் கூட்டணியில் இருந்தாலும் விட்டதை பிடிக்க வேண்டும் என்ற ஆதங்கமும், தவிப்பும் உள்ளவர் ஏசிஎஸ். அதனால் சொந்த செல்வாக்கால் வெற்றி பெற நிறையவே வாய்ப்புள்ளது. இவர் வெற்றி பெற்று டெல்லிக்கே போனாலும், மத்திய அரசுக்கு குடைச்சல் தராமல் இருப்பார் என்று கூறப்படுகிறது. (இதற்கு கூட்டணியில் பாஜக உள்ளதாகவும் இருக்கலாம்) இவர் மத்திய அமைச்சர் ஆவதால், எடப்பாடியாருக்கு பெருத்த நன்மையும் உள்ளதால், அவரும் முடிந்த அளவு ஏசிஎஸ்-ஐ கை தூக்கி விடுவார் என்று தெரிகிறது.

    அரசியல் அனுபவம்

    அரசியல் அனுபவம்

    40 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருக்கும் ஏசிஎஸ்-க்கு எடப்பாடியாரை விட அரசியல் அனுபவம் அதிகம் என்பதை முதலில் கூட்டணியில் உள்ளவர்களுக்கே நன்கு தெரியும். இது எல்லாவற்றையும்விட பண பட்டுவாடா என்ற காரணத்தை முன்வைத்தே மக்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார்கள்.

    திக்.. திக்..

    திக்.. திக்..

    ஆக மொத்தம் வேலூரில் திமுக, அதிமுகவுக்கு என்ற சாதக, பாதகங்கள் ஒரு சேர உள்ளதால் தேர்தலில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் என்னதான் சாதீய ஓட்டுக்கள், தனிப்பட்ட செல்வாக்கு, கூட்டணி கட்சியினர் ஆதரவு, அரசியல் அனுபவம் என்று இருந்தாலும், தேர்தல் நடந்து முடியும்வரை ஏசிஎஸ்-க்கு ஒவ்வொரு நிமிஷமும் திக் திக் தான்!

    English summary
    There is a tough competition between AIADMK candidate AC Shanmugam and DMK Candidate kathir Anand in Vellore Consitution Election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X