டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாயிகளின் டிராக்டர் பேரணி.. டெல்லி போலீஸ் திடீரென தடியடி.. கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி போலீஸ் தடியடி காரணமாக வன்முறைக் களமாக மாறியுள்ளது. விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் விரட்டியதால் டெல்லியின் எல்லைப்பகுதிகள் போர்க்களமாக காட்சியளிக்கின்றன.

The bodies of two unidentified were found near Katpadi railway station

டெல்லி எல்லைகளில் இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்திருந்தனர். ராஜபாதையில் குடியரசு தின பேரணி முடிவடைந்த பிறகு டிராக்டர் பேரணிகளை நடத்தலாம் என்று டெல்லி காவல்துறை அனுமதி வழங்கி இருந்தது.

ஆனால், சில விவசாயிகள் முன்கூட்டியே டிராக்டர் பேரணியை நடத்தினர். போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை தகர்த்து எறிந்தனர். போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சில விவசாயிகள் சென்றனர்.

சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில், காவல்துறையினரின் வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் ஏறிநின்று அந்த வாகனங்களை கைப்பற்றினர்.

சிங்கு எல்லைப் பகுதியில் காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி விவசாயிகளை கலைத்தனர். இதனால் அந்த இடம் முழுக்க புகை மண்டலமாக காட்சியளித்தது. போலீசார் தடியடி நடத்திய வீடியோக்களும் வெளியாகியுள்ளன. தடுப்புகளை அகற்ற முயன்றபோது, அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். அடுத்தடுத்த இந்த சம்பவங்களால் டெல்லியில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.

English summary
Police use tear gas on farmers who have arrived at Delhi's Sanjay Gandhi Transport Nagar from Singhu border
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X