வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அனிதா யாரு.. நம்ம பொண்ணுதானே.. தங்கச்சிதானே.. பழிவாங்கணும்.. அந்த நாள் ஏப்ரல் 18.. உதயநிதி ஸ்டாலின்

திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Google Oneindia Tamil News

வேலூர்: "அனிதா யார்? நம் வீட்டு பொண்ணுதானே.. நம்ம தங்கச்சி தானே... நம் வீட்டுப் பெண்ணுக்கு இந்த மாதிரி நடந்தால் நாம விட்டுருவோமா? விடக்கூடாது. இவங்கள பழிக்குப் பழி வாங்கணும். அந்த நாள் ஏப்ரல் 18!" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். இவரது பேச்சுக்கு இளசுகள் கூடி வருவது திமுகவுக்கு பலத்தை தந்துள்ளது, அதுவும் உதயநிதி சிரித்துகொண்டே பொதுமக்களிடம் இயல்பாக பேசி வருவது மக்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், இன்றும்கூட வேலூர் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து, காட்பாடி, ஆற்காடு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் சொன்னதாவது:

மேகதாது அணை கட்ட எனது மகன் மணல் சப்ளையா? ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் பதில்மேகதாது அணை கட்ட எனது மகன் மணல் சப்ளையா? ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் பதில்

ஏடிஎம் வாசல்

ஏடிஎம் வாசல்

"தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்றபோது முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? நான் இன்னும் டிவி பார்க்கவில்லை என்று சொன்னார். இப்படிப்பட்ட முதல்வர் தேவையா? நமக்கு தேவையா? 5 வருடத்தில் பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகம் வந்திருக்கிறார். இப்போது எத்தனை முறை வருகிறார். எல்லாம் தேர்தலுக்காகத்தான். ஒரேநாளில் பணம் செல்லாதுன்னு சொன்னார். கடைசியில ஏடிஎம் வாசலில் 150 பேர் கியூவில் நின்று செத்தார்கள்.

கலர் கலர் தேர்தல் அறிக்கைகள்.. எது பெஸ்ட்.. எது வேஸ்ட்.. வாங்க பார்க்கலாம்!

அனிதா தற்கொலை

அனிதா தற்கொலை

அனிதாவை ஞாபகம் இருக்கா? நன்றாகப் படித்து மருத்துவராகணும் என்று ஆசைப்பட்டார். நீட் தேர்வை திணித்து, அந்தத் தேர்வை ரத்து செய்துவிடுவோம் என பொய்யை சொல்லி.. கடைசியில் அனிதாவை டாக்டராக விடாமல் தடுத்ததால், அவர் தற்கொலையே செய்துகொண்டார்.

நம்ம தங்கச்சிதானே?

நம்ம தங்கச்சிதானே?

அனிதா யாரு.. நம் வீட்டு பொண்ணுதானே? நம்ம தங்கச்சி தானே. நம்ம வீட்டு பெண்ணுக்கு இது மாதிரி நடந்தால் விட்டுருவோமா? இவங்கள பழிக்குப் பழி வாங்கணும். பழி வாங்க வேண்டிய நாள் ஏப்ரல் 18. நேத்து பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "நான் முதல்வர் ஆவேன்னு எதிர்பார்க்கவே இல்லை" என்றார். நாம கூடதான் இவர் முதல்வர் ஆவார்னு எதிர்பார்க்கவே இல்லை.

போராட்டங்கள்

போராட்டங்கள்

பிறகு ஐயா.. நீங்கள் என்ன சாதனை பண்ணீங்கன்னு கேட்கிறாங்க. அதுக்கு முதல்வர், "என் ஆட்சியிலதான் நிறைய போராட்டங்கள் நடந்திருக்கு. விவசாயிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என 35 ஆயிரம் போராட்டங்கள் என் ஆட்சியிலதான் நடந்திருக்குன்னு" சொல்றார். ஆட்சி சரியில்லாமல் போராட்டம் நடத்தினால் இதை ஒரு சாதனைன்னு சொல்றார்

டயர் நக்கி

டயர் நக்கி

ஓபிஎஸ்-ஐ டயர் நக்கின்னு அன்புமணி சொன்னாரு. நான் இந்த வார்த்தையை சொல்லல. வயதில் பெரியவர், 2 முறை முதல்வர், துணை முதல்வராக இருக்கக்கூடியவரை பார்த்து டயர் நக்கின்னு சொன்னது அன்புமணி சொல்லலாமா? ஆனா என்மேல கோபப்படறாங்க. அதனாலதான் ஓபிஎஸ் வீட்டுக்கு போய் தூங்கும்போது, டயர் நக்கி.. டயர் நக்கின்ற வார்த்தை காதுல விழுந்துட்டே இருக்கு.

கடன் தள்ளுபடி

கடன் தள்ளுபடி

நம்ம தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் வாங்கினால் தள்ளுபடி செய்யப்படும். இன்றைக்கோ நாளைக்கோ போய் உடனே வாங்கிடுங்க. நம்ம தலைவர் வந்தவுடன் தள்ளுபடி செய்துவிடுவார்" என்றார்.

English summary
Udhayanidhi Stalin campaigned for DMK Vellore Candidate Kadhir Anand and slams PM Modi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X