வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னது.. காசு இல்லையா... செல்பி எடுக்க வந்த தொண்டரை விரட்டிய வைகோ.. சலசலப்பு வீடியோ!

பணம் இல்லாததால் செல்பி எடுக்க வந்தவரை வைகோ திருப்பி அனுப்பினார்

Google Oneindia Tamil News

வேலூர்: காசு கொடுக்காததால் செல்பி எடுக்க மறுத்து தொண்டரை வைகோ விரட்டியதால் ஆம்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 9-ம் தேதி மதிமுக சார்பில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் "பொதுச்செயலாளர் வைகோவுக்கு கட்சியினர் இனிமேல் யாரும் சால்வை அணிவிக்கக் கூடாது. அப்படி சால்வை அணிவிக்க விரும்புவோர் அதற்கு பதிலாக கட்சிக்கு நிதி வழங்கலாம். அதேபோல, வைகோவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவோர் குறைந்தபட்ச நிதியாக ரூ.100 வழங்க வேண்டும்" என்று அந்த அறிவிப்பு இருந்தது.

இந்நிலையில், சென்னையில் இருந்து கிருஷ்ணகிரியில் நடந்த கல்யாணம் ஒன்றில் கலந்து கொள்ள வைகோ கார் மூலம் வேலூர் வழியாக சென்றார். அப்போது, ஆம்பூரில் கட்சி சார்பாக வைகோவுக்கு வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இரு புதிய மாவட்டங்கள் உதயம்.. வேலூர் மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது.. பின்னணி என்ன? இரு புதிய மாவட்டங்கள் உதயம்.. வேலூர் மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது.. பின்னணி என்ன?

வைகோ

வைகோ

அதனால் ஏராளமான தொண்டர்கள் வைகோவை பார்ப்பதற்காக காத்திருந்தனர். வைகோவின் கார் ஆம்பூர் பஸ் ஸ்டேண்ட் அருகே வந்ததும், பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்தனர் தொண்டர்கள். பலத்த வரவேற்புடன், கார விட்டு கீழே இறங்கினார் வைகோ. உடனே கட்சியினர் ஒவ்வொருவரும் வைகோவிடம் ரூ.100 தந்து, செல்பியும் எடுத்துக்கொண்டனர். இதை பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்.

தொண்டர்

தொண்டர்

அவர் தொண்டர் இல்லை என்று தெரிகிறது. அதேபோல, காசு கொடுத்து போட்டோ எடுக்கும் விஷயமும் தெரியாது போல. அதனால் வைகோ பக்கத்தில் ஓடிவந்து செல்பி எடுக்க ரெடியானார். அவர் கட்சிக்காரர் என்று நினைத்த வைகோவும், பணம் எங்கே என்று கேட்டார். அந்த நபரோ தன்னிடம் பணம் இல்லை என்றதும், அவரை வைகோ செல்பி எடுக்கவிடாமல் திருப்பி அனுப்பிவிட்டார்.

சலசலப்பு

சலசலப்பு

இதனால் ஆர்வத்துடன் வந்த அந்த நபரோ, விரக்தி, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இந்த சம்பவத்தால் ஆம்பூர் பஸ் ஸ்டாண்டில் சலசலப்பு ஏற்பட்டது. இப்படி பணம் இல்லாததால், வைகோ அந்த நபரை திருப்பி அனுப்பிவிட்ட சம்பவத்தை அங்கிருந்த யாரோ வீடியோவும் எடுத்து, இணையத்திலும் போட்டுள்ளனர். அந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகிறது.

வீடியோ

வைகோவுடன் செல்பி எடுக்க வேண்டும் என்றால் ரூ.100 கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் போட்டோ எடுக்க சென்ற நபர் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்தை செல்போனில் யாரோ வீடியோ எடுத்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வசூல்

வசூல்

வீடியோ வைரலாவது ஒரு பக்கம் இருந்தாலும், சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி வரை சென்ற வைகோ, வழியில் ஆங்காங்கே தனது கட்சிக்காரர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்து கொண்ட வகையில், ஒரே நாளில் ரூ.53 ஆயிரம் வசூல் ஆகிவிட்டதாம். இதை மதிமுக நிர்வாகிகளே தெரிவித்துள்ளனராம்!

English summary
MDMK President Vaikos condemned not pay to selfie and this Controversy video is goes viral on socials now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X