வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாளை வேலூரில் தேர்தல்.. இன்று அதிகாலையே சென்று அத்திவரதரை தரிசித்த கதிர் ஆனந்த்.. பரபர பேட்டி!

வேலூர் லோக்சபா தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த் காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் இன்று காலை வழிபாடு நடத்தினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    "நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் அதிமுக": ஸ்டாலின் குற்றச்சாட்டு!

    வேலூர்: வேலூர் லோக்சபா தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த் காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் இன்று காலை வழிபாடு நடத்தினார்.

    வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றார். புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அதிமுக கூட்டணி சார்பில் இங்கு போட்டியிடுகிறார்.

    Vellore DMK candidate Kathir Ananth did a pooja in in Athi Vardar temple

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இருவரும் வேலூரில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் இதற்கான பிரச்சாரம் நேற்றோடு முடிவிற்கு வந்தது.

    இந்த நிலையில் கதிர் ஆனந்த் காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் இன்று காலை வழிபாடு நடத்தினார். காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதர் தற்போது இந்தியா முழுக்க பிரபலம். தமிழகத்தில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் இங்கு குவிந்து வருகிறார்கள்.

    வேலூர் பக்கமே செல்லவில்லையே.. கனிமொழி ஏன் பிரச்சாரம் செய்யவில்லை.. கதிர் ஆனந்த் அளித்த பதில்! வேலூர் பக்கமே செல்லவில்லையே.. கனிமொழி ஏன் பிரச்சாரம் செய்யவில்லை.. கதிர் ஆனந்த் அளித்த பதில்!

    அதேபோல் பல மாநிலங்களில் இருந்து இவரை தரிசனம் செய்ய மக்கள் கூட்டம் கூட்டமாக காஞ்சிபுரத்தை நோக்கி படை எடுத்து வருகிறார்கள். ஆடி மாதம் என்பதால் தற்போது அங்கு கூடுதல் கூட்டம் கூடி வருகிறது.

    இளம் மஞ்சள் நிற பட்டாடையில் காட்சி அளிக்கும் அத்திவரதரை கதிர் ஆனந்த் தரிசித்தது பெரிய வைரலானது. நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இன்று அவர் வழிபாடு நடத்தி உள்ளார். இதற்கு அவர் செய்தியாளர்களிடம் விளக்கமும் அளித்தார்.

    அதில், திமுக ஆன்மீக பாதையில் செல்லவில்லை. நாங்கள் எப்போதும் போல ஏற்கனவே பயணித்த பாதையில் தான் செல்கிறோம். நாங்கள் ஏன் மக்களுடன் உடன் இருக்க கூடாது. அப்படியே திமுக ஏதோ தவறு செய்வது போல பேச வேண்டாம்.

    நீங்கள் நினைப்பது மாதிரி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் மத ரீதியாக செயல்படவில்லை, நீங்களே எதுவும் சொல்ல வேண்டாம். நீங்களே எங்களை ஜோடிக்க வேண்டாம். மக்கள் எதை செய்கிறார்களோ, அவர்களோடு நாங்கள் உடன் நிற்கிறோம், என்று அத்திவரதரை தரிசித்த பின் கதிர் ஆனந்த் பேட்டி அளித்தார்.

    English summary
    Vellore DMK candidate Kathir Ananth did a special pooja in in Athi Vardar temple.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X