வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முத்தலாக்... அதிமுகவின் மூன்று நிலைப்பாடுகளால் விழிபிதுங்கும் வேலூர் ஏசி சண்முகம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore Election : AC shanmugam : முத்தலாக்..அதிமுகவின் நிலைப்பாடுகளால் விழிபிதுங்கும் ஏசி சண்முகம்

    வேலூர்: முத்தலாக் விவகாரத்தில் அதிமுக மூன்று நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி மசோதா நிறைவேற பாஜகவுக்கு மறைமுகமாக உதவியுள்ளதால் வேலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    வேலூர் லோக்சபா தொகுதியில் எப்படியும் வெற்றி பெறுவிடுவோம் என்கிற பெரும் நம்பிக்கையில் இருக்கிறார் ஏ.சி.சண்முகம். அதிமுக கூட்டணி வாக்குகள் அல்லாமல் திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருக்கும் செங்குந்த முதலியார்களின் வாக்குகளை முழுமையாக நம்பி இருக்கிறார் ஏ.சி. சண்முகம்.

    இதனால் தாம் வெற்றி பெறுவது உறுதி என நினைக்கிறார் ஏ.சி. சண்முகம். இதனிடையே வேலூரில் திமுக ஜெயிக்கட்டும்.. சட்டசபை இடைத்தேர்தல்களில் நாங்கள் ஜெயிக்கிறோம் என ஒரு உடன்பாடு இரு கட்சிகளிடையே ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

    கிராமம்.. விவசாய குடும்பம்தான்.. படிக்கிற பிள்ளை எங்க இருந்தாலும் மேலே வந்துடும்.. உதாரணம் பொன்மணிகிராமம்.. விவசாய குடும்பம்தான்.. படிக்கிற பிள்ளை எங்க இருந்தாலும் மேலே வந்துடும்.. உதாரணம் பொன்மணி

    அதிமுகவுக்கு பாஜக வார்னிங்

    அதிமுகவுக்கு பாஜக வார்னிங்

    இது பாஜக மேலிடத்துக்கும் போனது. இதனால் கடுப்பாகிப் போன பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, அதிமுகவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்தே வேலூர் தொகுதியில் முழு வீச்சில் அதிமுக பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதுவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மும்முரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

    லோக்சபாவில் ஆதரவு

    லோக்சபாவில் ஆதரவு

    இந்நிலையில் லோக்சபாவில் முத்தலாக் மசோதா மீது விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய அதிமுக எம்பி ரவீந்திரநாத், மசோதாவை ஆதரித்து வாக்களித்தார். இஸ்லாமியர்கள் கணிசமாக உள்ள வேலூர் தொகுதி தேர்தல் நடைபெறும் நிலையில் முத்தலாக் மசோதாவை ரவீந்திரநாத் ஆதரித்து வாக்களித்தது அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ராஜ்யசபாவில் இரண்டு நிலைப்பாடு

    ராஜ்யசபாவில் இரண்டு நிலைப்பாடு

    இதையே திமுகவும் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியது. இதையடுத்து ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதாவை அதிமுக கடுமையாக எதிர்த்து பேசியது. ஆனால் பாஜகவுக்கு உதவும் வகையில் வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்தது. இதனால் முத்தலாக் மசோதா ராஜ்யசபாவிலும் நிறைவேறியது.

    அதிமுக நிலைப்பாடுகளால் சண்முகம் ஷாக்

    அதிமுக நிலைப்பாடுகளால் சண்முகம் ஷாக்

    இப்படி முத்தலாக் விவகாரத்தில் மூன்றுவிதமான நிலைப்பாடுகளை அதிமுக எடுத்திருப்பதால் எளிதாக வெல்ல முடியும் என கணக்குப் போட்டிருந்த ஏ.சி. சண்முகம் ரொம்பவே அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டாராம். இஸ்லாமியர் வாக்குகளை பெற வேறு என்ன வழி என்ன தீவிரமான ஆலோசனையில் இருக்கிறதாம் ஏசிஎஸ் தரப்பு.

    English summary
    vellore candidate AC shanmugam was shocked over the AIADMK's Triple stands on Triple Talaq Bill.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X