வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேலூரில் திமுக பெற்றது சாதாரண வெற்றி அல்ல.. இமலாய வெற்றி.. அசத்தும் புள்ளி விவரம்!

வேலூரில் திமுக வெற்றிபெற்றது சாதாரண வெற்றி கிடையாது, மாபெரும் வெற்றி என்று புள்ளி விவரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore Election Result : வேலூர் கோட்டையை கைப்பற்றியது திமுக. அதிமுகவிற்கு தோல்வி - வீடியோ

    வேலூர்: வேலூரில் திமுக வெற்றிபெற்றது சாதாரண வெற்றி கிடையாது, மாபெரும் வெற்றி என்று புள்ளி விவரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.

    பெரும் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பிற்கு இடையில் வேலூர் லோக்சபா தேர்தலில் திமுக கடைசி நேரத்தில் வெற்றியை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் தோல்வியை தழுவி உள்ளார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 485340 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

    அதிமுக கூட்டணியின் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 477199 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவி உள்ளார். திமுக 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது .

    ஸ்கெட்ச் போட்டு தூக்கிய துரைமுருகன்.. மொத்த வாணியம்பாடியும் திமுகவுக்கே.. செம ஆதரவு! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய துரைமுருகன்.. மொத்த வாணியம்பாடியும் திமுகவுக்கே.. செம ஆதரவு!

    எப்படி முக்கியம்

    எப்படி முக்கியம்

    23 வருடங்களுக்கு பிறகு திமுக நேரடியாக வேலூரில் வெற்றிபெறுகிறது. ஆனால் இந்த வெற்றியை மோசமான வெற்றி, இமாலய வெற்றி கிடையாது என்று அரசியல் விமர்சகர்கள் சிலர் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் திமுக கட்சிக்கு இது ஒரு வகையில் இமாலய வெற்றி ஆகும். இங்கு இஸ்லாமிய வாக்குகள் அதிகம் இருந்தாலும் இத்தனை வருடங்கள் முடிவு என்னவோ இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வந்தது இல்லை.

    அப்போது

    அப்போது

    கடந்த 2014 லோக்சபா தேர்தலில் வேலூரில் திமுக கூட்டணி சார்பாக ஐயுஎம்எல் போட்டியிட்டது. அதேபோல் பாஜக கூட்டணி சார்பாக புதிய நீதிக்கட்சியின் ஏ.சி சண்முகம் போட்டியிட்டார். அதிமுக சார்பாக செங்குட்டுவன் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியின் விஜய் இளஞ்செழியன் வேறு போட்டியிட்டார்.

    கூட்டணி

    கூட்டணி

    இதில் அதிமுகவின் செங்குட்டுவன் 3,83,719 வாக்குகள் பெற்றார், பாஜக கூட்டணியின் புதிய நீதிக்கட்சியின் ஏ.சி சண்முகம் 3,24,326 வாக்குகள் பெற்றார். இஸ்லாமிய வாக்குகள் இருந்தும், திமுக இஸ்லாமிய வேட்பாளரை நிறுத்தியும் இங்கு பாஜக அதிக வாக்குகளை வென்றது. திமுக சார்பாக ஐயுஎம்எல் வேட்பாளர் அப்துல் ரஹ்மான் 2,05,896 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் கட்சியின் விஜய் இளஞ்செழியன் 21,520 வாக்குகள் பெற்றார்.

    கணக்கு

    கணக்கு

    கணக்குப்படி பார்த்தால் இந்த லோக்சபா தேர்தலில் அதிமுக பாஜகவுண்ட சேர்ந்து 7 லட்சம் வாக்குகளை வென்று இருக்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவிற்கு தேமுதிக, பாமக என்று எல்லோரும் ஆதரவு அளிப்பதால், குறைந்தபட்சம் 7 லட்சம் வாக்குகள் பெற்று இருக்க வேண்டும். ஆனால் அதிமுக 4.77 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.

    தேர்தல்

    தேர்தல்

    அதே சமயம் போன தேர்தலில் காங்கிரஸ், திமுக என்று சேர்த்து 2.20 லட்சம் வாக்குகள் பெற்ற திமுக இந்த முறை 4.85 லட்சம் வாக்குகள் வென்றுள்ளது. அதாவது 2004க்கு பின் வேலூரில் வெற்றி பெறாமல் இருந்த திமுக இப்போது கூடுதலாக, புதிதாக 2.60 லட்சம் வாக்குகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இதை திமுகவிற்கு கிடைத்த இமாலய வெற்றி என்று கூறுகிறார்கள்.

    English summary
    Vellore Election Result: DMK win is a massive one - Data proves the claim.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X