வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த பரபரப்புல கூட கிளுகிளுப்பு கேட்குது.. திமுக வெற்றி பற்றி துரைமுருகன் சொன்ன நக்கல் கருத்து!

வேலூர் தொகுதி லோக்சபா தேர்தலில் திமுக கட்சி வெற்றிபெற்றதை அடுத்து திமுக பொருளாளர் துரைமுருகன் சொன்ன கருத்து வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore Election Result : திடீரென முன்னிலையில் வந்த கதிர் ஆனந்த்..அதிமுகவுக்கு பின்னடைவு- வீடியோ

    வேலூர்: வேலூர் தொகுதி லோக்சபா தேர்தலில் திமுக கட்சி வெற்றிபெற்றதை அடுத்து திமுக பொருளாளர் துரைமுருகன் சொன்ன கருத்து வைரலாகி உள்ளது.

    வேலூர் தொகுதிக்கு லோக்சபா தேர்தல் நடைபெற்று தற்போது முடிவுகள் வெளியாகி உள்ளது. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த வாக்கு எண்ணிக்கையில் கடைசியில் திமுக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    Vellore Election Result: Duraimurugan funny comment on his son victory

    வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் அதிமுக கட்சிதான் முன்னிலை வகித்தது. ஆனால் போக போக அதிமுக பின்னடைவை சந்திக்க தொடங்கியது.இந்த நிலையில் தற்போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 485340 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

    அதிமுக கூட்டணியின் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 477199 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவி உள்ளார். திமுக 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது .

    இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து திமுக பொருளார் துரைமுருகனிடம் கேள்வி கேட்கப்பட்டது. உங்கள் மகனின் வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள். அவர் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்று இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு பதில் அளித்த துரைமுருகன், ஆமாம் அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். நான் அதில் நினைக்க என்ன இருக்கிறது. அவர்தான் வென்றுவிட்டாரே.

    அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றது பற்றி பத்திரிக்கையாளர்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். அதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதே தான் நானும் நினைக்கிறேன், என்று கிண்டலாக குறிப்பிட்டார். கதிர் ஆனந்த் வெற்றிபெறுவாரா என்று திமுகவினர் பதற்றத்தில் இருந்த நேரத்தில் துரைமுருகன் இப்படி பேசியது பெரிய வைரலானது.

    English summary
    Vellore Election Result: DMK Duraimurugan funny comment on his son victory.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X