வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓபிஎஸ் vs இபிஎஸ்.. வேலூர் தோல்வியால் விஸ்வரூபம் எடுக்கும் விரிசல்.. குறி வைக்கப்படும் ஓபிஆர்!

வேலூர் தொகுதியில் நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது அந்த கட்சிக்குள் மேலும் பூசலை உருவாக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore Election Result : வேலூர் கோட்டையை கைப்பற்றியது திமுக. அதிமுகவிற்கு தோல்வி - வீடியோ

    வேலூர்: வேலூர் தொகுதியில் நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது அந்த கட்சிக்குள் மேலும் பூசலை உருவாக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    கடந்த 5ம் தேதி, திங்கள்கிழமை, வேலூர் லோக்சபா தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக சார்பாக கதிர் ஆனந்த் போட்டியிட்டார்.

    அதிமுக கூட்டணி சார்பாக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இங்கு போட்டியிட்டார். இங்கு அதிமுக கட்சி தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒரே அதிமுக எம்பியாக ஓ.பி.ரவீந்திரநாத் மாறியுள்ளது.

    வேலூர் தொகுதியில் நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது அந்த கட்சிக்குள் மேலும் பூசலை உருவாக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    அதிமுக எப்படி

    அதிமுக எப்படி

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அதிமுக கட்சியில் நிறைய குழப்பங்கள், சிக்கல்கள் நிகழ்ந்து வந்தது. கட்சி இரண்டாக பிரிந்து, பின் மூன்றாக பிரிந்து பெரிய சிக்கல் ஏற்பட்டது. பின் தற்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் எல்லாம் இணைந்து, அதிமுக இரட்டை தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

    எப்படி கட்டுப்பாடு

    எப்படி கட்டுப்பாடு

    தொடக்கத்தில் அமைதியாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கட்சியை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தார். முக்கியமாக நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்கு பின் கட்சி அவரின் கட்டுப்பாட்டிற்குள் அதிகம் வந்துள்ளது. இதற்கு காரணம் நிறைய இருக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தாலும் சட்டசபை இடைத்தேர்தலில் 22 தொகுதியில் 9 தொகுதியில் வென்று சிறப்பாக ஆட்சியை தக்க வைத்தது. பல எதிர்ப்பு இருந்தும் கூட திமுக ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை. இதன் பின்தான் அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாக எடப்பாடி பழனிச்சாமி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.

    இன்னொரு பக்கம்

    இன்னொரு பக்கம்

    ஆனால் இன்னொரு பக்கம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்தியில் இருக்கும் சில பாஜக தலைவர்கள் உதவியுடன் இன்னும் அதிமுகவிற்குள் மதிப்புடன்தான் வலம் வருகிறார். அதிமுகவில் யாராவது தனது பேச்சை கேட்கவில்லை என்றால் உடனே அவர் பாஜக தேசிய தலைவர்கள் சிலரிடம் புகார் அளிப்பதும் நடந்து வருகிறது. இதனால் அதிமுகவிற்குள் உட்கட்சி பூசல் அதிகமாகி உள்ளது.

    என்ன முக்கியம்

    என்ன முக்கியம்

    அதிலும் முக்கியமாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பதவி பறிப்பு, வரிசையாக ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட அதிரடியை தொடர்ந்து நிகழ்த்தி ஆட்சி, கட்சி இரண்டும் தனது கட்டுப்பாட்டில் முழுக்க கொண்டு வர எடப்பாடி முயற்சித்து வருகிறார். இது அதிமுக கட்சிக்கு உள்ளேயே சில குழப்பத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    வேலூர்

    வேலூர்

    இதோ இப்போது வேலூர் தொகுதியில் நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவி இல்லை. இதன் மூலம் அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் துவங்கி உள்ளது. அதிமுகவின் ஒரே ஒரு எம்பியாக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி. ரவீந்திரநாத்தான் தற்போது இருக்கிறார் . ஏற்கனவே இதனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினரிடையே கருத்து வேறுபாடு இருந்தது.

    இல்லை

    இல்லை

    இந்த நிலையில் வேலூர் தேர்தலிலும் தோல்வியை தழுவியது அதிமுகவில் பிரிவினை மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள். ஏனென்றால் இனி ஏ.சி சண்முகம் இனி அமைச்சராக முடியாது. அதனால் ஓ.பி. ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி கேட்க ஒ.பன்னீர்செல்வம் முயன்று வருகிறார். ஆனால் அவருக்கு பதவி அளிக்க கூடாது என்று அதிமுகவிலேயே சிலர் காய் நகர்த்தி வருகிறார்கள். இது அக்கட்சியினர் இடையே மேலும் பிளவை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Vellore Election Result may give extra power to Edappadi Palanisamy inside the party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X