வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவிற்கு நாம் தமிழர் கொடுத்த ஷாக்.. திமுகவின் வெற்றிக்கு இதுதான் மிக முக்கிய காரணம்!

வேலூர் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெறும் வாக்குகள் பெறும் வெற்றியாளரை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore Election Result : வேலூர் கோட்டையை கைப்பற்றியது திமுக. அதிமுகவிற்கு தோல்வி - வீடியோ

    வேலூர்: வேலூர் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள்தான் திமுகவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக மாறியுள்ளது. வேலூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலெட்சுமி போட்டியிட்டார்.

    வேலூர் லோக்சபா தொகுதி தேர்தல் நடந்து முடிந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் தோல்வியை தழுவி உள்ளார்.

    திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 485340 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். அதிமுக கூட்டணியின் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 477199 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவி உள்ளார்.

    என்ன நிலை

    என்ன நிலை

    இந்த வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் அதிமுக 16000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது. இதுவரை ஐந்து சுற்று வாக்குகள்தான் எண்ணப்பட்டு இருந்த நிலையில் அதிமுகதான் காலையில் முன்னிலை வகித்தது. அப்போது அதிமுக வெல்லும் என்றுதான் எல்லோரும் கணித்தார்கள்.

    யார்

    யார்

    அப்போது நாம் தமிழர் கட்சி வெறும் 2000 வாக்குகள்தான் பெற்று இருந்தது. ஆனால் அதன்பின் நாம் தமிழர் கட்சி 6 மற்றும் ஏழாம் சுற்றில் வேகம் எடுத்து அதிகமான வாக்குகள் பெற்றது. அப்போதே தேர்தல் முடிவில், நாம் தமிழர் கட்சிதான் வெற்றியாளரை முடிவு செய்யும் சக்தியாக உருவெடுத்தது.

    வாய்ப்பு உள்ளது

    வாய்ப்பு உள்ளது

    தொடர்ந்து 6 மற்றும் 7வது சுற்றில் நாம் தமிழர் அதிக வாக்குகளை பெற்றது. நாம் தமிழர் 9 சுற்றுகளில் 12 ஆயிரம் வாக்குக்கள் பெற்றது. இதன் மூலம் அதிமுக பின்னுக்கு சென்று திமுக மேலே வந்தது. திமுக அதிமுக இடையே வாக்குகள் வித்தியாசம் வெறும் 9 ஆயிரம் வந்து நின்றது. திமுக தொடர்ந்து முன்னிலை வகித்தது.

    நடக்கவில்லை

    நடக்கவில்லை

    அதன்பின் அதிமுக வாக்குகளை பெற்று முன்னேறும் என்று எல்லோரும் கணித்தனர். ஆனால் அதிமுகவின் வாக்குகள் எல்லாம் வரிசையாக நாம் தமிழர் கட்சிக்கு சென்றது. நாம் தமிழர் வரிசையாக 13000, 14000, 16000, 20000 என்று முன்னேறிக்கொண்டு சென்றது. அந்த அளவிற்கு அதிமுகவின் வாக்குகளை நாம் தமிழர் பிரித்தது. இதனால் திமுக அதிமுக இடையே வாக்குகள் வித்தியாசம் 9 ஆயிரம் என்று மாறாமல் இருந்தது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இந்த நிலையில் கடைசியில் நாம் தமிழர் கட்சி 26,995 வாக்குகள் பெற்று அசத்தியது. திமுக வெறும் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதாவது அதிமுகவின் வாக்குகளை நாம் தமிழர் பிரிக்கவில்லை என்றால் தேர்தல் முடிவில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கும். இதன் மூலம் சத்தமே இல்லாமல் நாம் தமிழர் ஆளும் கட்சிக்கு ஷாக் கொடுத்துள்ளது.

    English summary
    Vellore Election Result: Naam Tamilar may decide the winner in a close margin fight between AIADMK and DMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X