வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேலூரில் நெக் டூ நெக்.. அந்த வாக்குகள்தான் முடிவை தீர்மானிக்கும்.. பரபரக்கும் வாக்கு எண்ணிக்கை!

வேலூரில் நடந்த லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி தற்போது நடந்து வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore Election Results : வேலூர் லோக்சபா தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியது-வீடியோ

    வேலூர்: வேலூரில் நடந்த லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி தற்போது நடந்து வருகிறது. இந்த தேர்தலில் பதிவான தபால் வாக்குகள்தான் பெரும்பாலும் முடிவை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    வேலூர் லோக்சபா தொகுதி தேர்தல் நடந்து முடிந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. கடந்த 5ம் தேதி, திங்கள்கிழமை, வேலூர் லோக்சபா தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது.

    இந்த தேர்தலில் திமுக சார்பாக கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அதிமுக கூட்டணி சார்பாக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இங்கு போட்டியிட்டார். இந்த தேர்தலில் மொத்தம் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

    என்ன நிலை

    என்ன நிலை

    இந்த நிலையில் இங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தற்போது நடந்து வருகிறது. முதலில் வாக்குகள் எண்ணப்பட்ட தொடக்கத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இங்கு முன்னிலை வகித்தார். தொடர்ந்து முதல் சுற்று முழுக்க 400 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார்.

    மீண்டும் என்ன

    மீண்டும் என்ன

    அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை வகிக்க தொடங்கினார். கதிர் ஆனந்த் இரண்டாவது சுற்றில் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். தற்போது மீண்டும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகிக்க தொடங்கி உள்ளார்.

    என்ன கட்சி

    என்ன கட்சி

    இதனால் இரண்டு கட்சி வேட்பாளர்களுக்கும் இடையில் மிகவும் நெருக்கமான போட்டி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் 61798 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 58645 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக 3145 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    இந்த நிலையில் வாக்கு வித்தியாசம் 2000க்கும் குறைவாக இருந்தால், இந்த தேர்தலில் பதிவான தபால் வாக்குகள்தான் பெரும்பாலும் முடிவை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் மொத்தம் இந்த தேர்தலில் 3500 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது. இதன் முடிவுகள் கடைசியில் அறிவிக்கப்படும்.

    குறைவு

    குறைவு

    இந்த வாக்குகள்தான் கடைசியில் முடிவை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறைவாக வாக்கு வித்தியாசம் நிலவும் பட்சத்தில் அதிக தபால் வாக்குகள் பெற்றவர்கள்தான் வெற்றிபெற வாய்ப்பு உருவாகும்.

    English summary
    Vellore Election Result: Postal votes may decide the winner at the end in the neck to neck fight.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X