வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐடி ரெய்டுக்கு பதிலடி.. பிரேமலதாவின் சொந்த ஊரிலேயே திமுக சம்பவம்.. வெற்றிக்கு காரணமான ஆம்பூர்!

வேலூரில் திமுக வெற்றி பெற்றதற்கு அந்த கட்சி ஆம்பூரில் பெற்று அதிகமான வாக்குகளும் முக்கியமான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore Election Result : திடீரென முன்னிலையில் வந்த கதிர் ஆனந்த்..அதிமுகவுக்கு பின்னடைவு- வீடியோ

    வேலூர்: வேலூரில் திமுக வெற்றி பெற்றதற்கு அந்த கட்சி ஆம்பூரில் பெற்று அதிகமான வாக்குகளும் முக்கியமான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் சொந்த ஊர்தான் ஆம்பூர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வேலூர் லோக்சபா தேர்தலில் திமுக கடைசி நேரத்தில் வெற்றியை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் தோல்வியை தழுவில் உள்ளது.

    திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கடைசி நேரத்தில் வெற்றிபெற்று எம்பியாகி உள்ளார். காலையில் உற்சாகத்தில் இருந்த அதிமுகவினருக்கு இந்த தோல்வி அதிர்ச்சி அளித்துள்ளது.

    எப்படி

    எப்படி

    வேலூர் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆம்பூர் மக்கள்தான் அதிகம் வாக்களித்து இருக்கிறார்கள். ஆம்பூரில் திமுக கூட்டணி எடுத்த அதிக வாக்குகள்தான் கடைசி நேரத்தில் அதிமுகவை பின்னடைவை நோக்கி தள்ள வைத்தது. ஆம்பூர் மக்கள் திமுகவிற்கு மொத்தமாக வாக்குகளை வாரி வழங்கி உள்ளனர். ஆம்பூர்தான் தேர்தல் முடிவை மாற்றியது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    ஆம்பூர் என்பது தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் சொந்த ஊர் ஆகும். பிரேமலதாவிற்கு அந்த ஊரில் பெரிய அளவில் மதிப்பும் வரவேற்பும் இருக்கிறது. அதேபோல் அரசியல் ரீதியாக வேலூர் தேமுதிகவுக்கு கொஞ்சம் ஸ்டிராங் சோன். இதனால் ஆம்பூர் அதிகமாக கவனிக்கப்பட்டது.

    செல்வாக்கு உள்ளது

    செல்வாக்கு உள்ளது

    அதுமட்டுமில்லாமல் சமுதாய ரீதியாகவும் பிரேமலதாவிற்கு ஆம்பூரில் நல்ல பலம் இருக்கிறது. இதைத்தான் அதிமுக மிக சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தது. ஆம்பூரில் அதிமுக சார்பாக யாருமே தேர்தலில் பிரச்சாரம் செய்யவில்லை. அங்கு பிரேமலதாதான் முழுக்க முழுக்க கவனம் செலுத்தினார். அவர் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்று அதிமுக நினைத்தது.

    மாஸ்

    மாஸ்

    இதனால் ஆம்பூரில் தேமுதிகவின் பிரேமலதா களமிறங்கி பிரச்சாரம் செய்து வந்தார். ஆம்பூர் பொறுப்பு மொத்தமும் பிரேமலதாவிடம் கொடுக்கப்பட்டது. இதனால் அவர் அங்கு மிக தீவிரமாக பிரச்சாரம் செய்தார். ஆம்பூரில் தெருவதெருவாக பிரேமலதா பிரச்சாரம் செய்தார். என்ன பிரச்சாரம் செய்தும், இது எதுவுமே அதிமுகவிற்கு பலன் அளிக்கவில்லை. இப்போது கடைசியில் அதிமுக தோல்வியை தழுவி உள்ளது.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    லோக்சபா தேர்தல் கூட்டணியின் போது திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் பிரேமலதா இடையே பெரிய மோதல் வந்தது. அப்போதே பிரேமலதா, துரைமுருகன் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு என்பது, தன்னை பகைத்துக் கொண்டதால் நடந்தது. தேமுதிகவை பகைத்தால் இப்படித்தான் என்று கூறினார். துரைமுருகனை பிரேமலதாவும், அவரது சகோதரர் சுதீப்பும் மிக மோசமாக விமர்சித்தனர்.

    ஆனால் தற்போது

    ஆனால் தற்போது

    தற்போது பிரேமலதாவின் சொந்த ஊரிலேயே துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் ஆம்பூர்தான் அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறி இருக்கிறது என்று பிரேமலதாவிற்கு வெரி பேட் நியூஸ்!

    English summary
    Vellore Election Result: DMDK Premalatha became game-changer in Ambur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X