வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மநீம.. அமமுகவால் திமுகவிற்கு ஏற்பட்ட அந்த சிக்கல்.. வேலூர் இழுபறிக்கு இப்படி ஒரு காரணமா?

வேலூரில் அதிமுக திமுக இடையே மிகவும் நெருக்கமான போட்டி நிகழ்ந்து வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore Election Result : திடீரென முன்னிலையில் வந்த கதிர் ஆனந்த்..அதிமுகவுக்கு பின்னடைவு- வீடியோ

    வேலூர்: வேலூரில் அதிமுக திமுக இடையே மிகவும் நெருக்கமான போட்டி நிகழ்ந்து வருகிறது. இரண்டு கட்சிக்கும் இடையில் வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாக இருப்பதற்கும் விறுவிறுப்பான போட்டி நிகழ்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது.

    வேலூர் லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், அதிமுக - திமுக இடையிலான வாக்கு வித்தியாசம் தொடர்ந்து குறைகிறது. அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் 240351 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

    திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 237189 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக 3162 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் கட்டுமாமியான் போட்டி அங்கு நிலவுகிறது.

    வேலூர் மூலம் அதிமுகவில் நங்கூரமிட்ட பழனிச்சாமி.. ஜெயலலிதா இல்லாமலே திமுகவிற்கு கொடுத்த ஷாக்! வேலூர் மூலம் அதிமுகவில் நங்கூரமிட்ட பழனிச்சாமி.. ஜெயலலிதா இல்லாமலே திமுகவிற்கு கொடுத்த ஷாக்!

    அப்போது

    அப்போது

    லோக்சபா தேர்தலின் போது தமிழகத்தில் பலமுறை போட்டி நிலவியது. திமுக, அதிமுக, நாம் தமிழர், அமமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் போட்டியிட்டன. இதனால் வாக்குகள் பெரிய அளவில் பிரிந்து சென்றது. அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் வாக்குகளும் பிரிந்தது.

    யாருக்கு சென்றது

    யாருக்கு சென்றது

    எப்போதும் அதிமுகவிற்கு செல்லும் வாக்குகள், கடந்த லோக்சபா தேர்தலில் அமமுகவிற்கு சென்றது. அமமுக லோக்சபா தேர்தலில் பல தொகுதிகளில் மூன்றாம் இடம் வகித்தது. அந்த அளவிற்கு அதிமுகவின் வாக்குகளை அமமுக பிரித்தது.

    மக்கள் நீதி மய்யம்

    மக்கள் நீதி மய்யம்

    அதேபோல்தான் மக்கள் நீதி மய்யமும் அதிமுகவின் வாக்குகளை பெரிய அளவில் பிரித்தது. லோக்சபா தேர்தலில் கமல்ஹாசன் பிரச்சாரம் அதிக கவனம் ஈர்த்தது. அவர்கள் மொத்தம் 3.5% வாக்குகளை பல இடங்களில் பெற்றனர். இதனால் அதிமுகவின் வாக்குகள் அதிகமாக பிரிந்தது. இதனால் அப்போது அதிமுக அனைத்து (ஒரு தொகுதி தவிர) லோக்சபா தொகுதியிலும் தோல்வி அடைந்தது. ஆனால் இந்த முறை நிலைமை அப்படி இல்லை.

    இந்த முறை

    இந்த முறை

    இந்த முறை வேலூர் தேர்தலில் அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் இரண்டும் போட்டியிடவில்லை. இதனால் இவர்களின் வாக்குகள் பல மீண்டும் அதிமுகவிற்கு திரும்பி சென்று இருக்கிறது. யாருக்கு வாக்களித்தாலும், திமுகவிற்கு வாக்களிக்க மாட்டேன் என்று கருதும் சில வாக்காளர்கள், அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் இல்லாததால் மீண்டும் அதிமுகவிற்கு திரும்பி இருக்கிறார்கள்.

    அதிகம் ஆனது

    அதிகம் ஆனது

    இதனால்தான் அதிமுகவின் வாக்கு சதவிகிதம் அதிகம் ஆகியுள்ளது. ஆனாலும் ஆட்சி எதிர்ப்பு காரணமாக திமுகவிற்கும் ஆதரவாக, சமமாக வாக்கு சென்றுள்ளது. இதனால் இரண்டு கட்சிக்கும் சமமான வாக்குகள் சென்றுள்ளது. இதுதான் வேலூரில் இவ்வளவு இழுபறி நீடிக்கவும், நெருக்கமான போட்டி நடக்கவும் காரணம் ஆகும்.

    English summary
    Vellore Election Result: What is the reason for the close fight between AIADMK and DMK? - full details.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X