வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கரையை கடந்த நிவர்.. வேலூரில் 4 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை.. மக்கள் மகிழ்ச்சி

Google Oneindia Tamil News

வேலூர்: நிவர் புயல் கரையை கடந்த வேளையில் வேலூரில் 4 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

நிவர் புயல் இன்று அதிகாலை புதுவை அருகை கரையை கடந்தது. இதனால் புதுவை, கடலூர், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது.

Vellore gets 10 cm rain in just 4 hours

இந்த நிலையில் அதி தீவிர புயலான நிவர் புயலாக வலுவிழந்து திருவண்ணாமலையில் மையம் கொண்டது. இதனால் பிற்பகல் நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழையும் காற்றும் வீசியது.

மின்கம்பியில் தொங்கிய மரக்கிளை... உயிரை பணயம் வைத்து அகற்றிய ஊழியர் - பாராட்டிய நாராயணசாமிமின்கம்பியில் தொங்கிய மரக்கிளை... உயிரை பணயம் வைத்து அகற்றிய ஊழியர் - பாராட்டிய நாராயணசாமி

இதையடுத்து அந்த புயல் ராணிப்பேட்டை சென்றது. அங்கு காலை முதல் பலத்த காற்று வீசியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இணையதள சேவை மற்றும் செல்போன் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Vellore gets 10 cm rain in just 4 hours

காலை முதலே ராணிப்பேட்டை, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருளில் மூழ்கின. இதையடுத்து வேலூரில் நிவர் கரையை கடந்த போது காலை 9 மணி முதல் பலத்த மழை பெய்தது.

மதியம் 1 மணி வரை கனமழை பெய்தது. இதனால் வேலூரில் 4 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய காலத்திலிருந்து வேலூரில் மழையே இல்லை என மக்கள் கவலையடைந்தனர். தற்போது இந்த மழை அவர்களுக்கு ஆறுதலை தந்தது. வெயிலும் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

English summary
Vellore gets 10 cm rain in 4 hours as because of Nivar Cyclone landfall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X