வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிற்பகல் 3 மணி நிலவரப்படி வேலூரில் 52% வாக்குப்பதிவு

Google Oneindia Tamil News

வேலூர்: நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு. இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 பேர் வாக்களிக்க உள்ளார்கள்.

Newest First Oldest First
3:30 PM, 5 Aug

பிற்பகல் 3 மணி நிலவரப்படி வேலூர் லோக்சபா தொகுதியில் 52 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
1:42 PM, 5 Aug

வேலூர் லோக்சபா தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 29.46% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது வேலூர் சட்டமன்ற தொகுதியில் 24.73 சதவீத வாக்குகளும், அணைக்கட்டு தொகுதியில் 27. 14 சதவீத வாக்குகளும், கேவி குப்பத்தில் 30.75 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது. இதேபோல் குடியாத்தம் தொகுதியில் 32.43%, வாணியம்பாடி 30.21%, ஆம்பூரில் 31.48 % வாக்குகள் பதிவாகி உள்ளது.
10:08 AM, 5 Aug

9 மணி நிலவரப்படி வேலூர் லோக்சபா தொகுதியில் 7.4 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
9:35 AM, 5 Aug

வேலூர் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய பலத்தையும், அங்கீகாரத்தையும் பெறும். வேலூரில் ஏ.சி.சண்முகம் வெற்றிபெற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
9:00 AM, 5 Aug

வேலூர் வள்ளலார்நகரில் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், வேலூர் லோக்சபா தொகுதி தேர்தலில் 2 முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்
8:39 AM, 5 Aug

மக்கள் நேர்மையாக வாக்களிக்க வேண்டும்: வேலூர் ஆட்சியர் பேட்டி

வேலூர் அல்லாபுரத்தில் தனது வாக்கினை பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், "இளம் வாக்காளர்ளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடக்கிறது. எந்த தூண்டுதலுக்கும் மக்கள் இடம் தரக்கூடாது. சுதந்திரமாகவும், நேர்மையாகவும் வாக்களிக்க வேண்டும். இளம் வாக்காளர்கள் 22 சதவீதம் பேர் வேலூர் தொகுதியில் உள்ளனர்" என்றார்.
8:08 AM, 5 Aug

வேலூரில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட ஜூலை 4ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தேர்தல் நெறிமுறைகளை மீறியதாக திமுக அதிமுகவினர் உள்பட 82 வழக்குகள் பதிவு செய்யப்பபட்டுள்ளது.
8:00 AM, 5 Aug

வேலூர் லோக்சபா தேர்தலில் அல்லாபுரம் வாக்குச்சாவடியில் ஆட்சியர் சண்முகசுந்தரம் தனது வாக்கை பதிவு செய்தார்.
8:00 AM, 5 Aug

வேலூர் லோக்சபா தேர்தலில் 75 சதவிகிதத்துக்கு குறையாமல் வாக்குகள் பதிவாக வாய்ப்பு உள்ளது. பூத் ஸ்லிப் கட்டாயம் கிடையாது என்றம் 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்திரம் தெரிவித்துள்ளார்.
8:00 AM, 5 Aug

வேலூர் தேர்தலில் மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதன்படி, மொத்தம் 3,752 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரங்கள் (விவி பேட்) தலா 1,896 இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
7:59 AM, 5 Aug

வேலூர் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் டி.எம்.கதிர்ஆனந்த், நாம் தமிழர் சார்பில் எஸ்.தீபலட்சுமி, உள்பட மொத்தம் 28 பேர் போட்டியிட்டுள்ளனர்.
7:59 AM, 5 Aug

வேலூர் தொகுதியில் மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் 7,01,351, பெண்கள் 7,31,099, மூன்றாம் பாலினத்தவர் 105 பேர் உள்ளனர். தேர்தலையொட்டி, வேலூர் லோக்சபா தொகுதி முழுவதும் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது
7:59 AM, 5 Aug

நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு. இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Vellore Lok Sabha Election 2019 Live updates
English summary
Vellore Lok Sabha Election 2019 Live updates
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X