வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலூர் தேர்தல்.. திமுக திரில் வெற்றி.. கதிர் ஆனந்த் எம்பி ஆனார்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore Election Results : வேலூர் லோக்சபா தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியது-வீடியோ

    சென்னை: வேலூர் லோக்சபா தேர்தலில் திமுக வெற்றிபெற்றுள்ளது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 485340 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.அதிமுக கூட்டணியின் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 477199 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவி உள்ளார். திமுக 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது .

    கடந்த 5ம் தேதி, திங்கள்கிழமை, வேலூர் லோக்சபா தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்குப்பதிவில் ஈடுபட்டனர். 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

    இதையடுத்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக ராணிப்பேட்டையிலுள்ள, பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    Newest First Oldest First
    3:40 PM, 9 Aug

    8141 வாக்குகள் வித்திாசத்தில் வேலூரை கைப்பற்றியது திமுக. வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்.
    3:12 PM, 9 Aug

    வேலூர் தேர்தல் முடிவுகள் 4.30 மணிக்குதான் அறிவிக்கப்படும்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. வாக்கு எண்ணிக்கை ஏறத்தாழ முடிவடைந்துவிட்ட நிலையில் தள்ளிப்போகும் ரிசல்ட் அறிவிப்பு.
    2:45 PM, 9 Aug

    வேலூரில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் வெற்றி அறிவிப்பு வெளியாக வேண்டியது மட்டுமே பாக்கி
    2:22 PM, 9 Aug

    திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8460 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. வாக்கு எண்ணிக்கை நிறைவடையப்போவதால் ஏறத்தாழ திமுக வெற்றி உறுதியாகியுள்ளது.
    2:07 PM, 9 Aug

    அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் கொண்டாட்டம். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாட்டம்.
    2:07 PM, 9 Aug

    வேலூரில் 15,687 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட வேண்டியுள்ளது. ஏறத்தாழ கதிர் ஆனந்த் வெற்றி உறுதியாகிவிட்டது.
    2:04 PM, 9 Aug

    வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 9,188 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. வாக்கு எண்ணிக்கை நிறைவடைய உள்ள நிலையில் வாக்கு வித்தியாசம் குறைகிறது.
    1:53 PM, 9 Aug

    11,582 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் கதிர் ஆனந்த் முன்னிலை. கதிர் ஆனந்த் 4,64, 877 வாக்குகள் பெற்றுள்ளார். ஏசி சண்முகம் 4,53, 295 வாக்குகள் பெற்றுள்ளார்.
    1:46 PM, 9 Aug

    10,441 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை . மாறி மாறி முன்னிலை வித்தியாசம் வருவதால் பரபரப்பு.
    1:22 PM, 9 Aug

    வேலூரில் 9,403 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலை
    1:22 PM, 9 Aug

    அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் 10 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது
    11:56 AM, 9 Aug

    வேலூரில் திருப்பம்: திமுக அதிரடி முன்னிலை

    திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 264140 வாக்குகள் பெற்று முன்னிலை. அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் 256633 வாக்குகள் பெற்று பின்னடைவு. திமுக 7507 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. நாம் தமிழர் கட்சி 13539 வாக்குகள் பெற்றுள்ளது.
    11:56 AM, 9 Aug

    வேலூரில் திருப்பம்: திமுக அதிரடி முன்னிலை
    11:44 AM, 9 Aug

    திமுக அதிமுக இடையிலான வாக்கு வித்தியாசம் 6% லிருந்து 0.64% ஆக குறைந்தது
    11:42 AM, 9 Aug

    வேலூர்: அதிமுக - திமுக இடையிலான வாக்கு வித்தியாசம் தொடர்ந்து குறைகிறது. அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் 240351 வாக்குகள் பெற்று முன்னிலை. 8 சுற்று முடிவுகளில் அதிமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 237189 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக 3162 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. நாம் தமிழர் கட்சி 12560 வாக்குகள் பெற்றுள்ளது.
    11:17 AM, 9 Aug

    அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் வேலூரில் தொடர்ந்து முன்னிலை. ஏ.சி சண்முகம் 198147 வாக்குகள் பெற்று முன்னிலை. 6 சுற்று முடிவுகளில் அதிமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 189851 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக 8296 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. நாம் தமிழர் கட்சி 10046 வாக்குகள் பெற்றுள்ளது.
    10:57 AM, 9 Aug

    அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் வேலூரில் தொடர்ந்து முன்னிலை. தற்போது அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் 167517 வாக்குகள் பெற்று முன்னிலை. 6 சுற்று முடிவுகளில் அதிமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 151530 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக 15987 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. நாம் தமிழர் கட்சி 8310 வாக்குகள் பெற்றுள்ளது.
    10:04 AM, 9 Aug

    அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் 85200 வாக்குகள் பெற்று முன்னிலை. 4 சுற்று முடிவுகளில் அதிமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 77467 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக 7733 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. நாம் தமிழர் கட்சி 3950 வாக்குகள் பெற்றுள்ளது.
    9:46 AM, 9 Aug

    வேலூர் தேர்தல்: அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை

    அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் 61798 வாக்குகள் பெற்று முன்னிலை. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 58645 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக 3153 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. நாம் தமிழர் கட்சி 2308 வாக்குகள் பெற்றுள்ளது.
    9:19 AM, 9 Aug

    வேலூர் தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீண்டும் பின்னடைவு

    அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் 51869 வாக்குகள் பெற்று முன்னிலை. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 50446 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக 1423 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. நாம் தமிழர் கட்சி 523 வாக்குகள் பெற்றுள்ளது.
    9:08 AM, 9 Aug

    வேலூர் வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம்

    வேலூர் வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம்
    திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 34052 வாக்குகள் பெற்று முன்னிலை. அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் 32511 வாக்குகள் பெற்று பின்னடைவு. திமுக 1541 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. நாம் தமிழர் கட்சி 501 வாக்குகள் பெற்றுள்ளது.
    8:56 AM, 9 Aug

    வேலூர் தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை
    8:56 AM, 9 Aug

    திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 34052 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் பின்னடைவு. ஏ.சி சண்முகம் 32511 வாக்குகள் பெற்று பின்னடைவு.
    8:43 AM, 9 Aug

    வேலூர் தேர்தல்: அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் தொடர்ந்து முன்னிலை. ஏ.சி சண்முகம் 25544 வாக்குகள் பெற்று முன்னிலை. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 24064 வாக்குகள் பெற்றுள்ளார். கதிர் ஆனந்த் 1480 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு.
    8:40 AM, 9 Aug

    வேலூர் தேர்தல்: அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் தொடர்ந்து முன்னிலை. ஏ.சி சண்முகம் 21449 வாக்குகள் பெற்று முன்னிலை. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 20623 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். கதிர் ஆனந்த் 400 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு.
    8:29 AM, 9 Aug

    வேலூர் தேர்தல்: அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை. ஏ.சி சண்முகம் 4406 வாக்குகள் பெற்று முன்னிலை. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 3994 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். கதிர் ஆனந்த் 412 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு.
    8:28 AM, 9 Aug

    தபால் வாக்குகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை
    8:15 AM, 9 Aug

    வேலூர்: தபால் வாக்குகள் தற்போது எண்ணப்படுகிறது. 3,039 தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. காலை 8.30 மணியில் இருந்து மின்னணு வாக்குகள் எண்ணப்படும்.
    8:06 AM, 9 Aug

    வேலூர் லோக்சபா தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்குகள் எண்ணப்படுகிறது. வேலூர் தேர்தலில் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இன்னும் சற்று நேரத்தில் தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும்.
    5:43 AM, 9 Aug

    திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி வேட்பாளர், ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சியின் தீப லட்சுமி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்ப்பு
    READ MORE

    Vellore Lok Sabha Election Results 2019 Live
    English summary
    Counting of votes polled during the 5 August elections to Vellore Parliamentary constituency will be taken up today. You can get live updates here.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X