வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடைசி நேரத்தில் திடீரென தாமதமான தேர்தல் முடிவு.. பின்னணி காரணம் என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: வேலூர் லோக்சபா தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 3 மணிக்கே ஏறத்தாழ முடிவடைந்துவிட்ட நிலையிலும், தேர்தல் முடிவு அறிவிப்பு என்பது 3.45 மணியளவில்தான் வெளியானது.

3 மணியளவில், திமுக மற்றும் அதிமுக ஆகிய வேட்பாளர்களின் நடுவேயான வாக்கு வித்தியாசம் 7585 என்ற அளவில்தான் இருந்தது. தேர்தல் முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகிவிடும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென முடிவுகள் அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டது.

Vellore Lok Sabha election results getting late

மாலை 4.30 மணிக்குதான் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என்று ஒலிபெருக்கி மூலம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வேலூர் மாவட்ட கலெக்டர் அறிவித்தார். வேலூர் லோக்சபா தொகுதியில் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக வேட்பாளர் ஏ சி சண்முகம் ஆகிய இருவருமே மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள்.

வாக்குகள் வித்தியாசம் என்பது மிக குறைவாக உள்ளது நிலையில், வாக்கு எண்ணிக்கையை மீண்டும் சரிபார்க்கும் பணி நடைபெற்று வந்ததாகவும், ஒப்புகைச்சீட்டு சரிபார்க்கும் பணி நடைபெற்று, துல்லியமாக முடிவுகளை அறிவிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால்தான், தாமதமாக முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டதாகவும், தகவல்கள் வெளியாகின. இது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒருவழியாக, 9018 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் என்று, 3.45 மணியளவில் அறிவிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு முடிவுக்கு வந்தது.

English summary
Vellore Lok Sabha election results getting late this is creating panic among DMK workers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X