வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலூர் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் திரில் வெற்றி.. அதிமுக தோல்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore Election Results : வேலூர் லோக்சபா தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியது-வீடியோ

    வேலூர்: வேலூர் லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் திரில் வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகத்தை விட சுமார் 8141 வாக்குள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    வேலூர் லோக்சபா தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடந்தது. மொத்தம் 1,553 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

    vellore lok sabha election vote counting to begin today

    வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டது. அங்கு காலை 8மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த பணியில் 800க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தை சுற்றி 1073 போலீசாரும், துணை ராணுவத்தைச் சேர்ந்த 100 பேரும் 3 அடுக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் இறுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும் பெற்று இருந்தனர். இதனால் ஏசி சண்முகத்தைவிட திமுகவின் கதிர் ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 26,995 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.

    English summary
    vellore lok sabha eletion vote counting to begin today, who will win in vellore?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X