வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலூர் லோக்சபா தேர்தல்.. முத்தலாக் விவகாரத்தில் அதிமுக ஆதரவே ஏ.சி. தோற்றதற்கு காரணமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore Election Result : முத்தலாக் விவகாரம் தான் அதிமுக தோல்விக்கு காரணமா?- வீடியோ

    வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் நிறைந்த தொகுதிகளான ஆம்பூர், வாணியம்பாடி, விஷாரம் உள்ளிட்டவைகளில் முத்தலாக் மசோதாவில் அதிமுகவின் ஆதரவு நிலைப்பாட்டால் அக்கட்சி தோல்வி அடைந்துள்ளதற்கு ஒருவகை காரணமாக சொல்லப்படுகிறது.

    வேலூரில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்தும், அதிமுக சார்பில் ஏசி சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

    இதில் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி சீசா விளையாட்டு போல் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தன. ஒரு மணி நேரமாக பின்னிலை வகித்து வந்த திமுக தற்போது முன்னிலை வகித்து வந்தது.

    திமுக - அதிமுக இடையில் கடுமையான போட்டி.. இழுபறிக்கு பின் இப்படி ஒரு காரணம் இருக்கிறதா? திமுக - அதிமுக இடையில் கடுமையான போட்டி.. இழுபறிக்கு பின் இப்படி ஒரு காரணம் இருக்கிறதா?

    தாக்கம்

    தாக்கம்

    தாக்கம்

    எதிர்ப்பும்

    எதிர்ப்பும்

    இந்த மசோதாவை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சில ஆண்கள் கையில் எடுத்துக் கொண்டே வருவதால் இதற்கு தடை விதிக்கும் மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு பாஜகவின் கூட்டணி கட்சிகளில் சில கட்சிகள் எதிர்ப்பும் சில கட்சிகள் ஆதரவும் தெரிவித்தன.

    கூட்டணி கட்சி

    கூட்டணி கட்சி

    இந்த நிலையில் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக முத்தலாக் தடை சட்டத்துக்கு ஆதரவை தெரிவித்திருந்தது. அதே போல் மாநிலங்களவை அதிமுக உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது வேலூர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்பட்டது.

    அதிமுகவுக்கு

    அதிமுகவுக்கு

    மேலும் வேலூர் தேர்தல் நடைபெறும் நிலையில் அதிமுகவின் ஒரே ஒரு எம்பியான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தது ஏசி சண்முகத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் வாக்குகள் அதிமுகவுக்கு கைக் கொடுக்காது என கருதப்பட்டது.

    பக்க விளைவுகள்

    பக்க விளைவுகள்

    எண்ணியது போலவே அதிமுகவுக்கு ஆம்பூர், வாணியம்பாடி பகுதி இஸ்லாமிய மக்கள் வாக்குகளை அளிக்கவில்லை என்பது வாக்கு எண்ணிக்கையில் கண்கூடாக தெரிகிறது. அதே வேளையில் முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்த திமுக, அதிமுகவின் வாக்குகளை அள்ளி வருகிறது என்றே சொல்லலாம். முத்தலாக் தடை சட்டம் யாருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    பக்க விளைவுகள்

    பக்க விளைவுகள்

    எண்ணியது போலவே அதிமுகவுக்கு ஆம்பூர், வாணியம்பாடி பகுதி இஸ்லாமிய மக்கள் வாக்குகளை அளிக்கவில்லை என்பது வாக்கு எண்ணிக்கையில் கண்கூடாக தெரிகிறது. அதே வேளையில் முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்த திமுக, அதிமுகவின் வாக்குகளை அள்ளியது என்றே சொல்லலாம். முத்தலாக் தடை சட்டத்தில் மக்களவையில் ஆதரவு மாநிலங்களவையில் எதிர்ப்பு என்ற இரட்டை நிலைப்பாடும் தோல்விக்கு காரணமாகியுள்ளது.

    English summary
    Vellore Loksabha election: Triple talaq bill affects DMK or ADMK? Round by round the election results is getting changed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X