வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மு.க. ஸ்டாலின் முட்டாள்.. விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நாராச பேச்சு!

வேலூர் பிரச்சாரத்தில் முக ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார் விஜய பிரபாகரன்

Google Oneindia Tamil News

Recommended Video

    Vijaya Prabhakaran campaign: ஸ்டாலினை வெளுத்து வாங்கும் விஜயபிரபாகரன்

    வேலூர்: "என்கிட்ட கூட சிலர் ஸ்டாலினை பற்றி கேட்டாங்க.. நான் அவர் ஒரு "உளறும் புகார் பெட்டி"ன்னு சொன்னேன். பின்னே என்ன.. எப்பவுமே குறை சொல்லிட்டே இருக்கார். எதை எடுத்தாலும் அதை எதிர்த்தால் அவர்கள் முட்டாள் என்று அர்த்தம்" என்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.

    வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் போட்டியிடுகிறார். அவருக்காக விஜயபிரபாகரன் அங்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசும்போது சொன்னதாவது:

    Vijaya Prabhakaran campaigns in Vellore

    வேலூர் எங்க அம்மாவோட சொந்த மாவட்டம். இந்த மாவட்டத்தின் ஒரே மருமகன் விஜயகாந்த்தான். இப்போ இந்த வேலூர் 'டாக் ஆப் தி டவுன்' ஆகிவிட்டது. ஏன்னா.. ஆட்சியிலே இல்லேன்னாலும் பணம் மூட்டை மூட்டையாக எடுக்கப்பட்டுள்ளது. அதெல்லாம் யார் பணம்னு உங்களுக்கே தெரியும்.

    விஜயகாந்தை தொட்டால் பிரச்சினை-ன்னு சொல்லியும் துரைமுருகன் சீண்டி பார்த்தார், இப்போது அதன் விளைவு தெரிந்திருக்கும். "மடியில் கனம் இல்லை அதனால் வழியில் பயம் இல்லை" என்று ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் உங்கள் உடம்பு முழுவதும் கனம் இருக்கிறது. அதான் மாட்டிக்கிட்டீங்க.

    மகன் பாசம் கண்ணை மறைத்தது.. கூட்டணி கட்சி காங்கிரசையே விட்டு விளாசிய குமாரசாமி.. சுமலதா செம குஷி! மகன் பாசம் கண்ணை மறைத்தது.. கூட்டணி கட்சி காங்கிரசையே விட்டு விளாசிய குமாரசாமி.. சுமலதா செம குஷி!

    எல்லாவற்றையும் ஸ்டாலின் எதிர்த்து கொண்டே இருக்கிறார். என்கிட்ட கூட சிலர் ஸ்டாலினை பற்றி கேட்டாங்க. "அவர் ஒரு உளறும் புகார் பெட்டி"ன்னு சொன்னேன். எதை எடுத்தாலும் அதை எதிர்த்தால் அவர்கள் முட்டாள் என்று அர்த்தம். எதை எதிர்க்கணுமோ அதைத்தான் எதிர்க்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நாடு வளரும்" என்றார்.

    English summary
    Vijaya Prabhakaran campaigns in Vellore Constitution for AC Shanmugam and slams DMK Leader MK Stalin
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X