• search
வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"இவ்ளோ அழகா இருக்கியே.. இன்னுமா கற்புடன் இருக்கே?".. முதலிரவில் அதிரவைத்த கணவன்.. அடுத்து நடந்த ஷாக்

|

வேலூர்: "இவ்ளோ அழகா இருக்கியே" என்று சொன்னதுடன், "இன்னுமா கற்புடன் இருக்கே?".. முதலிரவில் கேட்க கூடாத ஒரு கேள்வியை கேட்டுவிட்டார் கணவர்.. விடிய விடிய புதுமனைவியை டார்ச்சர் செய்துள்ளார்.. அதனால் ஏற்பட்ட பயங்கரமான விளைவும், அதையொட்டி நடந்த தற்கொலையும் தான் இந்த செய்தி.

வேலூமாவட்டம், ஊசூர் அருகே உள்ளது கோவிந்தரெட்டி பாளையம்.. இங்கு வசித்து வந்தவர் சந்திரலேகா.. இவர் அப்பா ஒரு ராணுவ வீரர்.. மகளை நன்றாக படிக்க வைத்தார்.. பட்டதாரியாக்கினார்

பின்னர், காட்பாடியை சேர்ந்த பாலாஜி என்பவருடன் நிச்சயம் செய்து கடந்த 23-ம் தேதி இருவருக்கும் கல்யாணமும் செய்து வைத்தனர்.. பாலாஜி முனைவர் பட்டம் பெற்றவர்... சேலத்தில் ஒரு தனியார் காலேஜில் புரபொசராக வேலை பார்த்து வருகிறார்.

லடாக்கில் நிலைமை பதற்றமாக உள்ளது.. படைகளை குவித்து உள்ளோம்.. இந்திய ராணுவ தளபதி பரபரப்பு!லடாக்கில் நிலைமை பதற்றமாக உள்ளது.. படைகளை குவித்து உள்ளோம்.. இந்திய ராணுவ தளபதி பரபரப்பு!

 இளம்பெண்

இளம்பெண்

இந்நிலையில், கல்யாணம் ஆகி அடுத்த வாரம், அதாவது கடந்த 30-ம் தேதி சந்திரலேகா பாத்ரூமில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்... மகளின் உடல் கரிக்கட்டையாக விழுந்து கிடப்பதை பார்த்து பெற்றோர் அலறி கதறினர்.. உடனடியாக போலீசுக்கும் விஷயம் போனது.. விரைந்து வந்த அவர்கள், விசாரணையை ஆரம்பித்தனர்.

புகார்

புகார்

மகளின் மரணம் குறித்து பெற்றோரும் புகார் தர, அதன்பேரில் கணவர் பாலாஜியை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, சந்திரலேகாவின் ரூமில் ஒரு லெட்டர் கிடைத்துள்ளது.. அந்த லெட்டரை சந்திரலேகாவே கைப்பட எழுதியுள்ளார்.

முதலிரவு

முதலிரவு

அதில்,"முதலிரவு அன்னைக்கே என் மேல கணவர் சந்தேகப்பட்டார்.."நீ இவ்ளோ அழகா இருக்கியே.. இன்னுமா நீ கற்புடன் இருக்கே? உன்னை யாருமே காதலிக்கவில்லையா? நீ யாரையாவது காதலித்து இருக்கியா?.. ஒருவேளை நீ காதலித்த பையன் மறுபடியும் வந்தால், என்னை விட்டுட்டு அவனுடன் ஓடிப்போய்டுவியா" என்று கேட்டார்.. முதலிரவு முழுவதும் டார்ச்சர் தந்தார்.

 டார்ச்சர்

டார்ச்சர்

தினமும் அசிங்க அசிங்கமாகவே பேசினார்.. என்னை கொடுமைப்படுத்தினார்.. எனக்கு உடம்பு சரியில்லை என்றால்கூட, கல்யாணத்துக்கு முன்பான வாழ்க்கையை பற்றியே கேள்வி எழுப்புகிறார்.. எதற்கெடுத்தாலும் இப்படி டார்ச்சர் செய்வதால், என்னால் அவருடன் சந்தோஷமாக வாழ முடியவில்லை.. இனியும் வாழ முடியாது.. நான் நினைத்தபடி என் கல்யாண வாழ்க்கை அமையவில்லை.. அதனால நான் உங்களை விட்டு பிரிகிறேன்.. தங்கைகளுக்காகவது நல்ல மாப்பிள்ளையை பாருங்க" என்று எழுதியிருந்தார்.

நண்பர்

நண்பர்

இந்த கடிதத்தின் அடிப்படையிலும் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.. அப்போது, சந்திரலேகாவின் ஆண் நண்பர் ஒருவர் சந்திரலேகா வீட்டிற்கு சென்று அவருக்கும் அவரின் கணவர் பாலாஜிக்கும் திருமண வாழ்த்துகளை சொல்லி உள்ளார்.. அவரால் கல்யாணத்துக்கு வரமுடியவில்லை என்பதால், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விசாரணை

விசாரணை

அப்போது, சந்திரலேகா நல்ல பெண் என்று நற்குணங்களை நண்பர் எடுத்து சொல்லவும், பாலாஜிக்கு காதில் புகையே வந்துவிட்டது. அந்த நண்பர் வீட்டை விட்டு போனபிறகு திரும்பவும் இவர்களுக்குள் சண்டை வந்துள்ளது.. அதுதான் தம்பதியின் கடைசி சண்டை.. இதற்கு பிறகுதான் பாத்ரூமிற்கு சென்று சந்திரலேகா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. தீயில் வெந்த மகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றும் காப்பாற்ற முடியவில்லை.. கல்யாணமாகி ஒரு வாரமே ஆவதால், வருவாய் கோட்டாச்சியர் விசாரணையும் நடந்து வருகிறது!

English summary
young girl committed suicide in Vellore after husbands suspects
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X