வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பல பெண்களை சீரழித்த கணவர்.. நடவடிக்கை எடுங்க.. புகார் தந்த மனைவியால் வேலூரில் பரபரப்பு

பல பெண்களை ஏமாற்றி விட்டார் என்று கணவன் மீது மனைவி புகார் அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    பல பெண்களை ஏமாற்றி விட்டார்.. கணவன் மீது மனைவி புகார்-வீடியோ

    வேலூர்: "காதலிப்பதாக சொல்லி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த என் கணவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சப்-கலெக்டரிடம் மனைவி புகார் அளித்துள்ளார்.

    திருப்பத்தூர் டவுன் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கவுசல்யா. இவருக்கு வயது 28. பட்டதாரியான இவர் திருப்பத்தூர் உதவி கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதன் சுருக்கம் இதுதான்:

    "கடந்த 2013-ம் ஆண்டு பெங்களூருவில் பேஷன் டிசைனராக இருந்தபோது, திருவண்ணாமலையை சேர்ந்த வாஞ்சிநாதன் என்பவர் பேஸ்புக் மூலம் அறிமுகமானார்.

    எம்ஜிஆர் காலத்தில் தவறிய வாய்ப்பு.. 33 ஆண்டுக்கு பின் பிரிந்த நெல்லை.. உருவானது தென்காசி மாவட்டம் எம்ஜிஆர் காலத்தில் தவறிய வாய்ப்பு.. 33 ஆண்டுக்கு பின் பிரிந்த நெல்லை.. உருவானது தென்காசி மாவட்டம்

    கல்யாணம்

    கல்யாணம்

    ஒரு கட்டத்தில் காதலிப்பதாக சொன்னார். என்னை கல்யாணம் செய்து கொள்வதாக சொன்னார். பேச்சை கேட்டு திருமணத்துக்கு சம்மதித்தேன். 2013-ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்று சொல்லி என்னை பெங்களூருவில் உள்ள கோயிலுக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்தார்.

    நகைக்கடை

    நகைக்கடை

    என் சேமிப்பு பணத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரை வாஞ்சிநாதன் செலவழித்துவிட்டார். இதை கண்ட என் தந்தை எங்களை திருப்பத்தூருக்கு அழைத்து, 2015-ல் ரூ.3 லட்சம் செலவழித்து திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையில் கவரிங் நகைக்கடையை வைத்து கொடுத்தார். ஆனால் வியாபாரத்தை பெருக்க வேண்டும் எனக்கூறி 55 பவுன் என்னுடைய தங்க நகைகளை பெற்று அதை விற்று செலவழித்தார். எங்கள் உறவினர்களிடம் ரூ.7 லட்சம் வரை கடன் வாங்கி அதை திருப்பி கொடுக்கவில்லை.

    தகராறு

    தகராறு

    மதுபழக்கத்துக்கு அடிமையாகி பணத்தை செவழித்தார். தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து என்னிடம் பணம், நகை கேட்டு தகராறு செய்தார். ஒருக்கட்டத்தில் அவர் திருப்பத்தூருக்கு வரவில்லை. அவரை தேடி நான் சென்றபோது என்னை தகாத வார்த்தைகளால் பேசி அவர் தாயார் மூலம் என்னை வெளியே அனுப்பிவிட்டார்.

    கல்யாணம் ஆனவர்

    கல்யாணம் ஆனவர்

    அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது வாஞ்சிநாதன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும், பல பெண்களை காதலிப்பதாக கூறி அவர்களை திருமணம் செய்து அவர்களிடம் பணத்தையும், நகையையும் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தானிப்பாடி ஸ்டேஷனில் புகார் தர போனபோது, அங்கு வந்த வாஞ்சிநாதன் என்னை நடுரோட்டில் வைத்து அடித்தார். பிறகு திருப்பத்தூர் நகர போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    வாஞ்சிநாதன் எனக்கு போன் செய்து ஆபாசமாக பேசி என்னை திட்டினார். அடியாட்களை கொண்டு மிரட்டினார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இந்த மனு மீது உரிய விசாரணை நடத்த திருப்பத்தூர் நகர காவல் நிலையத்துக்கு சார் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.

    English summary
    Young Woman Complaint in Tirupattur Sub Collector against her Husbands cheating
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X