For Daily Alerts
Just In
சில்லறைப் பிரச்சினை... வாசம் இழக்கும் மல்லிகை... குப்பையில் கொட்டப்படும் அவலம்- வீடியோ
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் அதிகளவில் மல்லிகை, ரோஜா, சம்பங்கி உள்ளிட்ட மலர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. இவை நாள்தோறும் அங்குள்ள சந்தைகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் விற்பனைக்காக கொண்டு வரப்படுவதோடு, வெளி மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், மத்திய அரசின் அறிவிப்பால் நாட்டில் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பூ சந்தைகளில் அதிகளவு பூக்கள் விற்பனையாகாமல் தேக்கம் ஏற்படுவதாகவும், பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருவதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் விற்பனை ஆகாத பூக்களை குப்பையில் கொட்டி வருவதாகவும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர்.